லக்னோ: உ.பி., சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், மூன்றில் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆய்வு:
உ.பி., தேர்தலில் வேட்புமனு தாக்கலின் போது, வேட்பாளர்கள் அளித்த விவரங்களை கொண்டு, உத்தரப் பிரதேச தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்ததாவது:
கிரிமினல் வழக்கு:
உ.பி., சட்டசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 4,853 பேரில், ஆய்வு செய்யப்பட்ட 4,823 வேட்பாளர்களில், 859 பேர்(18%) மீது கிரிமினல் வழக்கு உள்ளது. மேலும் 704 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. இவர்களில் 62 பேர் மீது கொலை வழக்கும், 148 பேர் மீது கொலை முயற்சி வழக்கும், 38 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்களும், அவர்களில் 10 பேர் மீது பாலியல் வன்முறை வழக்கும் பதிவாகி உள்ளது.
மொத்த வேட்பாளர்களில் 1,457 பேர்(30%) கோடீஸ்வர வேட்பாளர்களாகவும் உள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.