லக்னோ : உத்திர பிரதேச மாநில சட்டசபைக்கான 6வது கட்ட தேர்தல் நாளை (மார்ச் 03) நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் 635 வேட்பாளர்களில் 160 பேர் கோடீஸ்வரர்கள். 126 பேர் கிரிமினல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.
கோடீஸ்வர வேட்பாளர்கள் :
பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 35 பேரும், பா.ஜ.,வை சேர்ந்த 33 பேரும், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 28 பேரும், காங்கிரசை சேர்ந்த 6 பேரும், ராஷ்டிரிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த 8 பேரும், சுயேட்சைகள் 23 பேரும் தங்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து உள்ளதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கிரிமினல் பின்னணி கொண்ட 126 பேரில் 109 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கிரிமினல் வேட்பாளர்கள் :
பா.ஜ.,வை சேர்ந்த 18 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 24 பேர் மீதும், ராஷ்டிரிய லோக்தள் கட்சியைச் சேர்ந்த 5 பேர் மீதும், சமாஜ்வாதியை சேர்ந்த 15 பேர் மீதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 4 பேர் மீதும், சுயேட்சைகள் 22 பேர் மீதும் குற்ற வழக்குகள் உள்ளன.
மொத்தமுள்ள 635 வேட்பாளர்களில் 229 பேர் 5 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள். 338 பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 205 வேட்பாளர்கள் 51 முதல் 80 வயதுடையவர்கள் ஆகும்.
English summary:
Lucknow: Uttar Pradesh Assembly elections for the 6th stage tomorrow (March 03) will be held. 635 candidates contesting the 160 billionaires. 126 people accused in a criminal case.