புதுடில்லி: மோடியின் ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது என உ.பி.,முதல்வராக பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் லோக்சபாவில் இன்று பேசுகையில் குறிப்பிட்டார்.
லோக்சபா எம்.பி.,யான ஆதித்யநாத், உ.பி., முதல்வராக பதவியேற்றுள்ளார். எம்.பி., பதவியை ராஜினாமா செய்யும் முன், லோக்சபாவில் இன்று அவர் பேசியதாவது: மோடி உலகம் அறிந்த தலைவராக உருவெடுத்துள்ளார். உ.பி.,யில் சாதி, மத கலவரத்தை அனுமதிக்க மாட்டோம். ஊழலுக்கு இடம் அளிக்க மாட்டோம். நான் தற்போது உ.பி., மாநில வளர்ச்சிக்காக பாடுபட போகிறேன்.
ராகுலை விட இளையவன் :
நான், அகிலேஷ்சை விட ஒரு வயது மூத்தவன்; ராகுலை விட வயதில் இளையவன். என்னால் நல்ல வளர்ச்சியை தர முடியும். உத்தரபிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றப்போகிறேன். உ .பி., மக்கள் வளர்ச்சிக்காக ஓட்டு அளித்துள்ளனர். மோடியின் கனவை உ.பி.,யில் நிறைவேற்றுவோம். இங்கு அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும். சிறந்த நிர்வாகமே எனது குறிக்கோள். ஏழை மக்களின் நலனுக்கே முதலிடம் கொடுப்போம். இவ்வாறு யோகி பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் யோசனை வரவேற்கத்தக்கது. இப்பிரச்னை நல்ல முறையில் முடிவுக்கு வர நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.