புதுடில்லி: சர்வதேச மகளிர் தினம் இன்று(மார்ச் 8) கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சல்யூட்:
பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது: பெண்கள் வெல்ல முடியாத சக்தி; அவர்களின் அர்ப்பணிப்பு, மன உறுதிக்கு என்றும் தலை வணங்குகிறேன். பெண்களின் பொருளாதார முன்னேற்றம், சுயசார்பு மற்றும் சமத்துவத்தை பேணிக்காப்பதில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
ஆதரவு தர வேண்டும்:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவிலும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் பெண்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இரக்கம், சகிப்புத்தன்மை, கடின உழைப்பு ஆகிய குணங்களோடு தலைமுறை தலைமுறைகளாக இந்தியப் பெண்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் பெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். பாலின சமத்துவம், பெண்களுக்கு உண்மையான அதிகாரம் அளிக்க நாட்டு மக்கள் உறுதி மேற்கொள்ள வேண்டும்; அவர்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.
உறுதி ஏற்போம்:
தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் தனது வாழ்த்து செய்தியில், உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பப் புரட்சிகள் உலகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு குறிப்பட்ட அளவில் வாய்ப்புகளை அள்ளித் தந்துள்ளன. பாலின பாகுபாட்டை நீக்கி, பெண்களுக்கு மதிப்பளிக்கவும் அவர்களுக்கு அதிகாரமளிக்கவும் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
உலகை வாழவைக்கும் பெண்கள்:
தமிழக முதல்வர் பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், பெண்கள் கல்வி அறிவு பெற்று, பொருளாதார ஏற்றம் பெறவும் முன்னேற்றம் அடையவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான திட்டங்களை மறைந்த முதல்வர் ஜெ., வழியில் செயல்படும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. பெண்கள் ஒற்றுமையுடனும் தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் வாழ்ந்து, வாழ்வில் எதிர்ப்படும் சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டு, உலகை வாழவைக்கும் பெண்ணாக, அனைத்து மகளிரும் உயர்ந்து விளங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.