ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள உத்தரகாண்ட் சமஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தர், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நாற்காலியை வாங்கி தரும்படி அடம் பிடித்து வருகிறார். அந்த நாற்காலி வரும்வரை, தரையில் அமர்ந்து தான் பணிபுரிவேன் என்றும் கூறியுள்ளார்.
ிதி பிரிவு மறுப்பு:
உத்தரகாண்ட் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் பியூஸ் காண்ட் திக் ஷித். இவர், அலுவலகத்தில் பயன்படுத்தி வரும் நாற்காலி உடைந்து விட்டது. எனவே, புதிதாக, 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு நாற்காலி வாங்கி தரும்படி துணைவேந்தர் திக் ஷித் கூறியுள்ளார். ஆனால், பல்கலையின் நிதி பிரிவு, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பல்கலையில் நிதி பற்றாக்குறை உள்ளதால், குறைந்த விலை கொண்ட நாற்காலியை பயன்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது.ஆனால், துணைவேந்தர் திக் ஷித் இதை கேட்க மறுத்து விட்டார். சொகுசு நாற்காலி வரும்வரை, தரையில் அமர்ந்து பணி புரிவேன் கூறி, அதன்படியே சிலநாட்களாக செயல்பட்டு வருகிறார்.
இது குறித்து,அவர் கூறுகையில், துணைவேந்தர் பதவி என்பது கவுரவமிக்கது. அதற்கு ற்றவாறு தான் அதன் இருக்கையும் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதுகுறித்து, பல்கலையின் நிதிபிரிவு உயர் அதிகாரி தான்ஜிம் அலி கூறுகையில், பல்கலையின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு தான், அது போல் கூறினோம். ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவே திணறி வருகிறோம். இத்தனை விலை உயர்வு உள்ள நாற்காலியை, தலைமை செயலக அதிகாரிகள் கூட பயன்படுத்துவதில்லை. எனினும், துணைவேந்தர் உத்தரவை தொடர்ந்து, புதிய நாற்காலிக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். விரைவில் அந்த நாற்காலி வந்து விடும் என்றார்.
English summary:
Haridwar: A Vice Chancellor of Uttarakhand Sanskrit University in Haridwar, who has bought a chair worth 60,000 rupees. Until that chair is coming, I will sit on the floor and work.