ராஞ்சி: ஜார்காண்ட் மாநில அரசு இணையதளத்தில், லட்சக்கணக்கான பென்ஷன்தாரர்களின் ஆதார் எண் விவரங்கள் வெளியானது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தோனிக்கு வந்த சிக்கல்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆதாருக்காக, தன் கைரேகை விவரங்களை பதிவு செய்த போது அது குறித்த புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அவர் சார்ந்த ஜார்கண்ட் மாநிலத்தில் மேலும் ஒரு சர்ச்சை உருவாகி உள்ளது. ஜார்கண்ட் மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் மற்றும் சமூக பாதுகாப்பு துறை சார்பில், 16 லட்சம் பென்ஷன்தாரர்களின் விவரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவர்களில், 15 லட்சம் பேர் தங்களின் ஆதார் விவரங்களை அளித்துள்ளனர். இந்த துறையின் இணைய தளம் ஜார்கண்டில் உள்ள தேசிய தகவல் மையம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளத்தில் பென்ஷன்தாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள், ஆதார் எண் மற்றும் கைரேகை விவரங்கள் திடீரென வெளியாகின.
இதையடுத்து ராஞ்சியில் உள்ள ஆதார் எண் அலுவலகம் சார்பில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசப்பட்டது, அந்த இணையதளம் உடனடியாக முடக்கப்பட்டது. இதுகுறித்து துறை இயக்குனர் ராம் பர்வேஷ் கூறுகையில், '' ஆதார் எண் அலுவலகத்தில் எங்களுக்கு போன் வந்தது. அவர்கள் கூறிய பிறகே, இணைய தள குழப்பம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிந்துள்ளோம். இந்த தவறு யாரால் நிகழ்த்தப்பட்டது என்பதை விசாரித்து வருகிறோம்,'' என்றார்.
English summary:
Ranchi: The Jharkhand state government website has released a huge controversy over the millions of pensioners'