பாட்னா: பீகார் மாநிலத்திற்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், ' பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சியை நாடு மேற்கொள்ள வேண்டும்' என, கூறியுள்ளார்.
யசோதா பென், சில காலமாக, நாடு முழுதுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உ.பி., மாநிலம், மதுராவில் உள்ள கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தார். கடந்த வாரம் தெலுங்கானா சென்று, அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார். அங்குள்ள நாக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
சிறப்பான வரவேற்பு:
இதன் தொடர்ச்சியாக, நேற்று பீகார் மாநிலத்திற்கு சென்றார். பெகுசராய் என்ற இடத்தில், மேவார் மன்னர் மகாராணா பிரதாப்பின் அமைச்சர் பாபா ஷாவின் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் பங்கேற்க செல்லும் வழியில், பீகார் தலைநகர் பாட்னாவிற்கு சென்ற யசோதா பென்னிற்கு, ராஜ்ய தைலிக் - சாகு இனத்தவர் சார்பில், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறிய சொற்பொழிவு ஆற்றிய யசோதா பென், சமூகத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்த வேண்டும் என்றால், பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இந்த இனத்தை சேர்ந்த பெண்கள் முன்வந்து சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க சமூகம் முன்வர வேண்டும். பீகார் மாநிலமும், அதன் மக்களும் சிறப்பானவர்கள் என்றார்.
யசோதா பென்னின் சகோதரர் பிரவீன் சந்திர மோடி என்ற அசோக் மோடி கூறுகையில், தியாகம் மற்றும் சிக்கனத்தின் மறுவடிவமே என் சகோதரி. இந்த நாட்டிற்காக பிரதமர் மோடி பணியாற்றுகிறார். மக்கள் அவருடன் உள்ளனர் என்றார்.

English summary:
Patna: Prime Minister Narendra Modi's wife Yashoda Ben, who has traveled for the first time in Bihar, said, "The country should take the initiative to give women power."