ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில், கல்வீச்சில் காயமடைந்த மாணவியை படம் பிடிப்பதில் ஆர்வம் காட்டாமல், அவரை காபாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போட்டோகிராபரை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.
சிரியாவில் நடந்த சம்பவம்:
கலவர பகுதியில், வன்முறை நடக்கும் பகுதியில், போர்கள பகுதியில் எடுக்கப்படும் படங்கள் உலகளவில் பேசப்படும். ஆனால், கடந்த வாரம் சிரியாவில் பஸ்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது, படுகாயம் அடைந்த குழந்தைகளை காப்பாற்ற அப்த் அல்காதர் ஹபாக் என்ற போராட்டோகிராபர் காப்பாற்ற முயற்சி எடுத்தது உலகளவில் பெரும் பாராட்டை பெற்றது. இதே போன்ற ஒரு சம்பவம், சில நாட்களுக்கு முன் காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நடந்துள்ளது.
ஸ்ரீநகரின் நவாக்தால் பகுதியில் கடந்த வியாழக்கிழமை உயர்நிலைப்பள்ளி மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் அவர்களை தவிர அந்த இடத்தில், சொற்ப எண்ணிக்கையில் போலீசாரும், பத்திரிகையாளர்கள், போட்டோகிராபர்கள் இருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கல், குஷ்பூ ஜன் என்ற மாணவியை தாக்கி அவரது மண்டையை பிளந்தது. ரத்தம் சொட்ட சொட்ட கீழே விழுந்த குஷ்பு ஜன்னை கண்டு மற்ற மாணவியர் அலறினர். அந்த பகுதியே திடீரென பதட்டமானது. அப்போது அசோசியேடட் பிரஸ் என்ற வெளிநாட்டு பத்திரிகை ஏஜன்சியின் போட்டோகிராபர் தர் யாசின் என்பவர் தன்னிடம் இருந்த கேமராவை தூக்கி எறிந்து விட்டு, காயமடைந்த மாணவியை இரு கைகளிலும் ஏந்தியபடி மருத்துவமனையை நோக்கி ஓடினார். மற்ற மாணவியரும் கதறி அழுதபடி அவரை பின் தொடர்ந்து ஓடினர்.
வழியில் வந்த காரை நிறுத்தி, காயமடைந்த மாணவியை அதில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர். சரியான நேரத்தில் அழைத்து செல்லப்பட்டதால், தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு அந்த மாணவி உயிர் பிழைத்தார்.
போட்டோகிராபர் தர் யாசின், காயமடைந்த மாணவியை கைகளில் சுமந்து செல்லும் காட்சியை உள்ளூர் போராட்டோகிராபர் ஒருவர் படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த படம் வைரலாக பரவி வருகிறது. போட்டோகிராபர் தர் யாசினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மாணவியர் மீது கற்களை வீசியது விஷமிகளும், மாணவர்களும் தான் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை உள்ளூர் மக்கள் மறுத்துள்ளனர்.
English summary:
Srinagar: Srinagar, in Srinagar, has not been interested in catching a picture of a wounded girl who has been praising the photographer for trying to save him.