லண்டன்: பிரிட்டனில் தங்கி இருந்த இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் அங்கிருந்து வெளியேறுவது புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெளிநாட்டு வேலை என்றால், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியர்களுக்கு சொர்க்கபூமியாக இருப்பது பிரிட்டன் தான். ஆனால், சமீபகாலமாக, சட்டவிரோதமாக அங்கு குடியேறிய இந்தியர்கள், விசா காலம் முடிந்த பிறகு பல ஆண்டுகளாக அங்கு தங்கி இருக்கும் இந்தியர்கள், இனிமேல் அங்கு காலம் தள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்து, தானாகவே அங்கிருந்து சொந்த நாட்டுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். கடந்த, 2016ம் ஆண்டில், 5,365 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறி உள்ளனர். அந்த ஆண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களின் மொத்த எண்ணிக்கையில், இது, 22 சதவீதமாகும்.
இதற்கு மேல் அங்கு தங்கினால், வேலை கிடைக்காது, வங்கி கணக்கு துவக்க முடியாது, டிரைவிங் லைசென்ஸ் கிடைக்காத நிலை உள்ளிட்ட பல சேவை வசதிகள் கிடைக்காது என்பதால் தான் இந்தியர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என, இந்தியர்கள் அதிகம் வசிக்கும், இயாலிங் சவுதால் என்ற தொகுதியின் தொழிலாளர் கட்சி எம்.பி., வீரேந்திர சர்மா கூறினார்.
English summary:
London: The number of Indians staying in Britain has set a new turn.