புதுடில்லி: 'இரட்டை இலை' சின்னம் பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு தொடர்பான விசாரணையில், இடைத்தரகர் சுகேஷ் சந்தரை, தனக்கு தெரியும் என, சசிகலா அக்கா மகன் தினகரன் டில்லி குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.
அ.தி.மு.க., இரு அணிகளாக பிரிந்ததால், தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, தினகரன் சார்பில் லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.
மூன்றாவது நாளாக இன்று(ஏப்-24)மாலை, 4:00 மணிக்கு, தினகரன், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
டில்லி போலீஸ் இணை கமிஷனர் பிரபிர் ரஞ்சன், துணை கமிஷனர் மதுர் வர்மா, உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத் ஆகியோர், மாறி மாறி விசாரணை நடத்தினர். இந்நிலையில், சுகேஷின் கோர்ட் காவல், இன்றுடன் முடிவடைகிறது. அவனை, இன்று மீண்டும் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், 8.50 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடத்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், விசாரணையில் அது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.தினகரன் மற்றும் அவரது உதவியாளர், நண்பர் மற்றும் இடைத்தரகர் சுகேஷ் சந்திராவுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், பகிர்ந்து கொள்ளப்பட்ட செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்கள் உள்ளதாகவும், போலீசார் தெரிவித்து உள்ளனர்.
தினகரன் ஒப்புதல்:
விசாரணைக்கு, தினகரன் போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆனாலும், நேற்றையை விசாரணையின்போது, இடைத் தரகர் சுகேஷ் சந்தரை, தனக்கு தெரியும் என, தினகரன் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.அவருக்கு எதிராக மிகவும் வலுவான ஆதாரங்கள் உள்ளதால், அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
9 மணி நேரம் விசாரணை:
தினகரனிடம் 3வது நாளாக விசாரணை நடத்தி வரும் டில்லி குற்றப்பிரிவு போலீசார், நள்ளிரவிலும் தொடர்ந்து 9 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர். இரவு 12.30 மணிக்கு தினகரன் கிளம்பி சென்றார். மீண்டும் அவர் இன்று (25ம்தேதி) மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.