புதுடில்லி: ரயில் தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கும் புதிய மெகா ஆப்பை, ரயில்வே துறை உருவாக்கி வருகிறது. இந்த புதிய ஆப் வசதி, ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஆப் வசதியின் பெயர், 'ஹிந்த்ரயில்' என, இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
ஏராளமான ஆப் வசதிகள்:
ரயில்கள் இயக்கம் தொடர்பாக தகவல் அறிய தற்போது ஏராளமான ஆப் வசதிகள் உள்ளன. சி.எம்.எஸ்., ஆப் எனப்படும் புகார் நிர்வாக சிஸ்டம் ஆப் வசதி; தேவைப்படும் தகவல்கள தரும் தேசிய ரயில் விசாரணை சிஸ்டம் எனப்படம் என்.டி.இ.எஸ்., ஆப் வசதி; முன்பதிவு டிக்கெட் மற்றும் முன்பதிவு வசதி இல்லாத டிக்கெட் பெறுவதற்கான ஆப் வசதி; இணைய தளம் மூலம் உணவுக்கு முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி., ஆப் வசதி என பல ஆப் வசதிகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து மெகா ஆப் வசதியை தான் ரயில்வே துறை தற்போது உருவாக்கி வருகிறது. இந்த ஆப் வசதிக்கு, ' மெரிரயில், இரயில், மைரயில், ரயில் அனுபூதி' என, பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இது குறித்து, ரயில்வே வாரிய உறுப்பினர்( போக்குவரத்து) முகமது ஜம்ஷெத் கூறியதாவது:
ரயில்கள் தாமதமாகும் போது, சரியான தகவல்களை பெறுவதில் சிக்கல் இருப்பது உண்மை தான். இப்பிரச்னையை தீர்க்க தான் புதிய மெகா ஆப் வசதி உருவாக்கப்படுகிறது. ஜூன் மாதம் முதல் இது செயல்பாட்டுக்கு வரும். ரயில் வரும் நேரம், புறப்படும் நேரம், தாமதம், ரத்து அறவிப்பு, பிளாட்பாரம் எண், ரயில் எத்தனை மணி நேரம் இயக்கப்படும், படுக்கை வசதி இருக்கிறதா, டாக்சி புக்கிங், போர்டர் வசதிக்கு உதவுவது, ஓய்வு அறை, ஓட்டம், சுற்றுலா வசதி, இணைய தளம் மூலம் உணவுக்கு ஆர்டர் கொடுப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும், உதவிகளையும் இந்த ஆப் வசதி மூலம் பெற முடியும். இந்த புதிய ஆப் வசதிக்கு,'ஹிந்த்ரயில்' என, பெயரிடப்படலாம். ஆனால், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
New Delhi: The Railways has created a new mega supermarket to respond to all the doubts of the train. The new App facility comes in from June. It is reported that the name of this facility is 'Hindhirai'.