மும்பை: நாட்டிலேயே மும்பைவாசிகள் தான் பெட்ரோலை அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
வரி உயர்வு:
நாடு முழுதும், பெட்ரோல் விலை சர்வதேச சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதனுடன் வாட் வரி உள்ளிட்ட சில வரி விதிக்கப்படுகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு வாட் வரியுடன் இணைந்து வசூலிக்கும் வறட்சி வரியை ரூ.3 ஆக உயர்த்தியுள்ளது. இதனால், மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.45 ஆகவும், நாக்பூரில் ரூ.77.14 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில் டில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.68.26 ஆக உள்ளது. கடந்த வருடம் வறட்சி இல்லாத போது, இந்த வறட்சி வரியை மாநில அரசு ரூ. 6 லிருந்து ரூ.9 ஆக உயர்த்தியது.
வேறெங்கும் இல்லை:
தற்போது வரியை உயர்த்தியுள்ளதன் மூலம், நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடுவதினால் ஏற்படும் இழப்பை சரி செய்ய முடியும் என பெயர் வெளியி விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.
பெட்ரோல் விற்பனை டீலர் ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வருடத்தில் வரி யுடன் சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.7 முதல் 8 வரை உயர்ந்துள்ளது. வறட்சி வரி மற்ற மாநிலங்களில் வசூல் செய்யப்படுவதில்லை. இந்த வரியை அரசு விலக்கி கொண்டால், மற்ற மாநிலங்களை விட பெட்ரோல் விலை இங்கு குறைவாக இருக்கும் என்றார்.
கடந்த ஏப்ரல் 1 ல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3.77 எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தபோது, அதன் பலனை மக்களுக்கு மாநில அரசு கொடுக்கவில்லை. டீலர்கள் கமிஷன் உயர்த்தி தரக்கோரி போராட்டம் நடத்துகின்றனர். இது ஏற்கப்பட்டால், விலை இன்னும் அதிகரிக்கும் என பொது மக்கள் ஒருவர் கவலையுடன் கூறினார்.
English summary:
MUMBAI: Mumbai Indians have bought petrol at a higher price.