மதுரை: மதுரையில் கோடை வெயில் மக்களை வாட்டி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். மக்கள் வெளியில் வரவே அச்சமடைந்தனர். மழை வருமா என எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
இந்நிலையில், இன்று 23 ம் தேதி மாலை திடீரென பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மதுரையின் கோரிப்பாளையம், பெரியார் பஸ் நிலையம் பகுதி, தெப்பக்குளம், அண்ணா நகர், கேகே நகர், பைபாஸ் ரோடு, தினமலர் அவின்யூ உள்ளிட்ட பல பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழை காரணமாக வெயிலால் அவதிப்பட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மழை தொடர வேண்டும் என கடவுளை வேண்டுவதாக கூறினர்.

English Summary:
Madurai: The summer heat in Madurai is gaining people. So people have been suffering from children and adults. People were afraid to come out. People who were waiting for the rain would get disappointed.