புதுடில்லி: 'ரேஷன் கடைகளில், உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் மானியம் குறித்த விபரங்களை எழுதி வைக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி
மூத்த தலைவருமான, ராம்விலாஸ் பஸ்வான், டில்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:ரேஷன் கடைகளில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மானிய விலையில்
கிடைக்கும் கோதுமை, கிலோ, 2 ரூபாய்க்கும்; அரிசி, கிலோ, 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
இவ்வாறு, மிக மலிவு விலையில் பொருட்கள் விற்கப்படும்போது, அதில் கிடைக்கும் நற்பெயரை, மாநில அரசுகள் மட்டுமே சம்பாதித்துக் கொள்வது துரதிருஷ்டவசமானது.
விவரங்கள்எனவே, அனைத்து மாநிலங்களிலும், ரேஷன் கடைகளில், பொருட்களுக்கு அளிக்கப்படும் மானிய தொகை, மானியம் யாரால் அளிக்கப்படுகிறது என்பன போன்ற விபரங்களை எழுதி வைக்கும்படி, மாநில அரசுகளிடம் கூறியுள்ளோம்.
இலவசம்:
ரேஷன் பொருட்களில், 1 கிலோ கோதுமைக்கு, 22 ரூபாயும்; 1 கிலோ அரிசிக்கு, 29.64 ரூபாயும், மத்திய அரசு மானியமாக அளிக்கிறது.
தமிழகம் போன்ற ஒரு சில மாநிலங்களில் கூடுதல் மானியம் அளிக்கப்பட்டு, இப் பொருட்கள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களைச் சேர்ந்த அரசுகள், ரேஷன் பொருட்களுக்கென எந்த செலவும் செய்வதில்லை. உணவுப் பொருட்களுக்காக வழங்கப்படும் மானியங்களுக்காக, மத்திய அரசு, ஆண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.
பரிந்துரை:
விவசாயிகளின் நலன் கருதி, துவரம் பருப்பு இறக்குமதி மீதான வரியை, 10 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக உயர்த்தலாம். இதற்கு, உணவுத்துறை அமைச்சகம் ஆதரவு தெரிவிக்கிறது. இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகத்துக்கு பரிந்துரை செய்வோம்.
இவ்வாறு பஸ்வான் கூறினார்.
English summary:
The Central Government has said, "New Delhi should keep a record of subsidies on ration shops and foodstuffs.