திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் விமான நிலையத்தில் பார்சலை எடுக்க வந்த ஸரித், அவரின் தோழி ஸ்வப்னா சுரேஷ், அவரின் நண்பர் சந்தீப் நாயர், இவர்களிடம் இருந்து தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் றமீஸ் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர். றமீஸிடம் இருந்து தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் மூன்று பேர் இப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பிடியில் சிக்கியுள்ளனர். அதில் ஒருவரான எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுபுழாவைச் சேர்ந்த ஜலால் திடீரென இன்று கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் சரணடைந்தவர் ஆவார். பல விமானநிலையங்கள் வழியாக 600 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தியதாக ஜலாலை ஏற்கெனவே சுங்கத்துறை தேடிவந்துள்ள நிலையில் அவர் சரணடைந்துள்ளார். ஜலாலுடன் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டுபேர் குறித்த விபரம் இன்னும் வெளியாகவில்லை. ஜலால் தங்கம் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்தக் காரில் ஓட்டுநர் இருக்கையின் அடிப்பகுதியில் ரகசிய அறை அமைக்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.முதல்வரின் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிவசங்கரன்
இந்தக் கும்பல் ஜூன் 24-ம் தேதி 9 கிலோ தங்கமும், ஜூன் 26-ம் தேதி 18 கிலோ தங்கமும் என மொத்தம் 27 கிலோ தங்கம் ஏற்கெனவே தூதரக பார்சல் வழியாகக் கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஃபைசல் ஃபரீத் துபாயில் இருந்து தங்கத்தை அனுப்பியுள்ளதாகவும். அந்தத் தங்கத்தை ஏர்ப்போட்டில் பெற்றுக்கொண்ட ஸரித், அதை சந்தீப் நாயரிடம் கொடுத்ததாகவும். சந்தீப் நாயர் அதை மலப்புரத்தைச் சேர்ந்த ரமீஸிடம் கொண்டு சேர்த்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்தத் தங்கம் இப்போது எங்கே இருக்கிறது என என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. மேலும், துபாயில் இருக்கும் ஃபைசல் ஃபரீத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக சி.பி.ஐ மூலம் இன்டர்போல் போலீஸாரின் உதவியை நாடவும் திட்டமிட்டுள்ளனர்.
Also Read: கேரளா தங்கம் கடத்தல்: `மலப்புரம் கனெக்ஷன்; பயணிகள் விமானம்!’ - அதிரவைக்கும் பின்னணி
இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட ஸரித், தனது வாக்குமூலத்தில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் சிவசங்கரனது வீட்டில் வைத்துதான் ஆலோசனை நடத்துவோம் என்றும். ஸ்வப்னா மூலமாகத்தான் சிவசங்கரனை தனக்கு தெரியும் எனக் கூறியிருந்தார். ஆனால், ஸ்வப்னாவுடன் கைது செய்யப்பட்டுள்ள சந்தீப் நாயர் சிவசங்கரனுக்கு இதில் பங்கு இல்லை எனக் கூறியுள்ளார். இந்தநிலையில் முதன்மை செயலாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள சிவசங்கரனிடம் விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக அவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். அவரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தங்கம் கடத்த பயன்படுத்திய ரகசிய அறையுடன் கூடிய கார்.
இதற்கிடையில் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்ததாக ஸ்வப்னா சுரேஷ் மீது எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கே.எஸ்.ஐ.டி.எல் நிறுவன எம்.டி ஜெயசங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவனந்தபுரம் கன்டோன்மென்ட் போலீஸார் ஸ்வப்னா மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ஸ்வப்னாவை பணியில் நியமித்த பி.டபிள்யூ.ஸி நிறுவனம் மற்றும் ஸ்வப்னாவை தேர்வு செய்த விஷன் டெக்னாலஜி ஆகிய நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
http://dlvr.it/RbcYw2
Wednesday, 15 July 2020
Home »
» `ஸ்வப்னா கடத்திய 27 கிலோ தங்கம் எங்கே?’ - சிவசங்கரனிடம் விசாரிக்கும் என்.ஐ.ஏ