ஆந்திராவில் மருமகனை வரவேற்க மாமியார் ஒருவர் 67 வகையான உணவு சமைத்திருப்பது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சக்கரம்போல் ஓடும் உலகத்தில் உணவு என்பதெல்லாம் ஒரு ரெடிமேட் பொருளை போன்று ஆகிவிட்டது. சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும், விருந்தாக இருந்தாலும் உடனே மக்கள் உணவகங்களை அணுகிவிடுகின்றனர். வாரக்கடைசி கொண்டாட்டங்கள் கூட லார்ஜ் பிஸ்ஸா, பக்கெட் பிரியாணி என மாறிவிட்டது. உறவினர்களை வரவேற்பதற்கு கூட கூல்கிரிங்ஸ் மற்றும் பேக்கிரிகளில் வாங்கப்பட்ட ஸ்வீட்களே பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர ஸ்விக்கி, சொமோட்டோ, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களின் வருகைக்குப் பின்னர் பலர் சமைப்பதையே குறைத்துவிட்டனர் என்று சொல்லலாம். ஆர்டர் செய்தால் அரை மணி நேரத்திற்குள் உணவு என்ற மனநிலைக்கு மக்கள் பழகிவிட்டனர். இந்நிலையில், வீட்டிற்கு வரும் உறவினரை எப்படி கவனிப்பது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் ஆந்திரப் பெண் ஒருவர் தனது சமையல் கை வண்ணத்தால் அசத்திக் காண்பித்துள்ளார். தனது வீட்டிற்கு வரும் மருமகனை வரவேற்று 5 கட்டமாக உணவுப் பரிமாறுவதற்காக, அப்பெண் 67 வகையான உணவுகளை தயார் செய்துள்ளார். வரவேற்பு பானம் முதல் சாப்பிட்டு முடித்த பின் போட வேண்டிய பீடா வரை அவர் சமைத்துள்ளார்.
This lady has prepared a 67-item Andhra five-course lunch for her visiting son-in-law, consisting of a welcome drink, starters, chaat, main course and desserts! Wow! #banquet pic.twitter.com/Li9B4iNFvc— Ananth Rupanagudi (@rananth) July 8, 2020 இந்த தகவலை ஆனந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான தகவல்களையும், கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவர் பதிவிட்ட வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். 2.5க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். கழுத்தை இறுக்கிய ஊஞ்சல்.. தவறி விழுந்த பென்சில்.. : 2 சிறுமிகளின் துயரம்..!
http://dlvr.it/RbHMXY
Thursday, 9 July 2020
Home »
» மருமகனை திகைக்க வைத்த மாமியார் - அடேங்கப்பா 67 வகை உணவுகள்..!