திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில் முதல் குற்றவாளி ஸரித், இரண்டாம் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு என்.ஐ.ஏ விசாரணை வளையத்தில் உள்ளனர். ஸ்வப்னா சுரேஷ் மற்றும் ஸரித் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை பேசிய போன் அழைப்புகள் குறித்த விபரம் இப்போது வெளியே வந்துள்ளது. அதில், ஸ்வப்னா கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் பேசியது அம்பலமாகியுள்ளது. மேலும், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரனும் ஸரித்தும் பேசியுள்ளதும் தெரியவந்துள்ளது. ஸரித் ஒன்பது முறை சிவசங்கரனை அழைத்துள்ளார். சிவசங்கரன் ஐந்து முறை ஸரித்திடம் பேசியுள்ளார். இதில், ஒரு அழைப்பில் 755 விநாடிகள் பேசியுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஸரித் கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பும் ஸரித்தும் சிவசங்கரனும் போனில் பேசியதாகவும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.
Also Read: கேரளா தங்கம் கடத்தல்: `மலப்புரம் கனெக்ஷன்; பயணிகள் விமானம்!’ - அதிரவைக்கும் பின்னணி
மேலும், அமைச்சர் ஜலீலும் ஸ்வப்னா சுரேசும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஒன்பது முறை பேசியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது அமைச்சர் ஜலீலின் பர்சனல் ஸ்டாப் நஸீரிடமும் ஸ்வப்னா உரையாடிய தகவலும் வெளியாகியுள்ளது. ஸ்வப்னா தலைமறைவாதற்கு முன்பு திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்துக்கு அருகில் இருந்ததாக அவரது மொபைல் டவர் லொக்கேஷன் மூலம் தெரிய வந்துள்ளது.கேரள அமைச்சர் ஜலீல்
இதைத் தொடர்ந்து முன்னாள முதன்மைச் செயலாளர் சிவசங்கரனிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு சுங்க அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தின் அருகில் உள்ள சுங்க அலுவலகத்தில் சிவசங்கரன் நேரில் சென்று ஆஜராகினார். அவரிடம் சுங்கத்துறை கூடுதல் ஆணையர்ர் ராம மூர்த்தி தலைமையில் மூன்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏ.சி ராம மூர்த்திதான், தங்கம் கடத்திய பார்சலை கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: `ஸ்வப்னா கடத்திய 27 கிலோ தங்கம் எங்கே?’ - சிவசங்கரனிடம் விசாரிக்கும் என்.ஐ.ஏ
இது ஒருபுறம் இருக்க ஸ்வப்னாவுடன் பேசியது குறித்து அமைச்சர் ஜலீல் கூறுகையில், `கடந்த மே 27-ம் தேதி யு.ஏ.இ தூதரக ஜெனரலின் அதிகாரபூர்வ தொலைபேசி எண்ணில் இருந்து எனக்கு ஒரு செய்தி வந்தது. அதில், `ஒவ்வொரு ரம்ஜான் பண்டிகைக்கும் யு.ஏ.இ தூதரகம் சார்பில் உணவு பொருள் பாக்கெட்டுகள் விநியோகம் செய்வது வழக்கம். இந்த முறை லக்டெளன் காரணமாக நிவாரணம் வழங்க இயலவில்லை. மே 27-ம் தேதி உணவு பொட்டலங்களை வழங்க வேண்டும்’ என அந்த மெசேஜில் கூறியிருந்தார்கள். நான் உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யலாம் என்றதும், அது சம்பந்தமாக ஸ்வப்னாவை தொடர்புகொள்ளும்படி யு.ஏ.இ தூதரக ஜெனரல் மெசேஜ் அனுபினார்.முதல்வரின் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சிவசங்கரன்
அதன் அடிப்படையிலேயே ஸ்வப்னாவிடம் பேசினேன். உணவு பொருட்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிட்கள், எடப்பாள், திருப்பிறங்கோடு பகுதிகளில் வழங்கினோம். அதற்கான பில், எடப்பாள் மத்திய வங்கியில் இருந்து யு.ஏ.இ ஜெனரல் கவுன்சிலின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. யு.ஏ.இ அந்த பில்லுக்கான பணத்தை மத்திய வங்கிக்கு அனுப்பி வைத்தது. உணவுப் பொருட்கள் வழங்குவது சம்பந்தமாகவும், பில்லுக்கான பணம் அனுப்புவதில் தாமதமானதால் அது சம்பந்தமாகவும் நான் ஸ்வப்னாவுடன் பேசினேன். யு.ஏ.இ தூதரக ஜெனரல் கூறியதன் அடிப்படையில்தான் நான் ஸ்வப்னாவுடன் போனில் பேசினேன்" என்றார். ஆனால், அவரது பர்சனல் ஸ்டாப் ஸ்வப்னாவிடம் பேசியது பற்றி கேட்டதற்கு, `அது தனக்கு தெரியாது’ என கூறியுள்ளார். தங்கம் கடத்தல் வழக்கு காரணமாக கேரள உயர் அதிகாரிகள் முதல் அமைச்சர்கள் வரை தூக்கம் இன்றி தவிக்கிறார்கள்.
http://dlvr.it/RbcYxW
Wednesday, 15 July 2020
Home »
» கேரளா: `ஸ்வப்னாவுடன் 9 முறை போனில் பேசிய அமைச்சர் ஜலீல்!’ - என்.ஐ.ஏ விசாரணையில் அம்பலம்