திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் என்ற பெயரில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார். தூதரகத்தில் பார்சல் எடுக்க வந்த ஸரித் கைது செய்யப்பட்ட உடன், அவருக்கும் கேரள ஐ.டி துறையின் ஸ்பேஸ் பார்க் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்வப்னாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. ஸ்வப்னா குறித்து விசாராணை நடத்தியபோது, கேரள ஐ.டி துறை செயலாளரும், முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளருமான சிவசங்கரன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. ஸ்வப்னாவின் வீட்டுக்குச் சென்று வரும் அளவிற்கு தொடர்பில் இருந்த சிவசங்கரனை தனது முதன்மைச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் பினராயி விஜயன். இந்த வழக்கில் பினராயி விஜயன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதித்தன. இதைத் தொடர்ந்து ஐ.டி துறை செயலாளர் பதவியில் இருந்தும் சிவசங்கரன் நீக்கப்பட்டார். மேலும் சிவசங்கரன் ஒரு வருடம் விடுப்பில் சென்றார். இந்த நிலையில்தான் சுங்கத்துறை அதிகாரிகள் சிவசங்கரனை ஒன்பது மணிநேரம் தொடர்ச்சியாக விசாரணை நடத்தினர். முதல்வரின் செயலாளராக இருந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது கேரள அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.கேரள முதல்வர் பினராயி விஜயன்
சிவசங்கரனிடம் சுங்கத்துறை நடத்திய விசாரணையில் அவர் ஸ்வப்னாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், அவர்கள் சேர்ந்து ஆலோசனை நடத்த தலைமைச் செயலகம் அருகிலேயே பிளாட் எடுத்ததும் தெரியவந்தது. ஐ.டி பார்க்ஸ் மார்க்கெட்டிங் அண்ட் ஆப்பரேஷன் டைரக்டர் அருண் பாலச்சந்திரன் மூலம் சிவசங்கரன் பிளாட் புக் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அருண் பாலச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.
Also Read: கேரளா: `ஸ்வப்னாவுடன் 9 முறை போனில் பேசிய அமைச்சர் ஜலீல்!’ - என்.ஐ.ஏ விசாரணையில் அம்பலம்
கொரோனா நிலவரம் குறித்து வழக்கமாகச் செய்தியாளர்களை சந்திப்பது போன்று இன்று மாலையும் பினராயி விஜயன் பேட்டி அளித்தார். அப்போது கொரோனா குறித்த கேள்விகளுக்கு முதலில் பதில் சொன்னார். தங்கம் கடத்தல் மற்றும் சிவசங்கரன் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான பதிலை இறுதியாக வைத்துக்கொள்ளலாம் என்றார். கொரோனா நடவடிக்கைகள் குறித்த கேள்விகள் நிறைவடைந்த பிறகு பினராயி விஜயன் கூறுகையில், ``சிவசங்கரன் குறித்து தலைமைச் செயலர் மற்றும் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.ஸ்வப்னா
அந்தக் குழு விசாரணை நடத்தி இன்று மாலையில் ரிப்போர்ட் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் எம்.சிவசங்கரன் விசாரணையை எதிர்கொள்ளும் விதமாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். அகில இந்திய சர்வீஸ் நடவடிக்கைச் சட்டத்தை மீறியதாக, விசாரணை குழு அறிக்கை கண்டுபிடித்துள்ளது. எனவே, அவர் மீது துறை ரீதியான விசாரணை தொடரும். முழு ரிப்போர்ட்டும் படித்த பிறகு மற்ற விஷயங்கள் குறித்து கூறலாம். ஸ்வப்னாவின் போலிச் சான்றிதழ் தொடர்பாக அவர் வேலை செய்த நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தனியாக விசாரணை நடத்தி வருகிறது. தங்கம் கடத்தல் சம்பந்தமாக மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்துகின்றன. ஆனால், போலிச் சான்றிதழ் சம்பந்தமாக மாநில போலீஸ் விசாராணை நடத்துகிறது" என்றார்.
http://dlvr.it/RbmKkB
Friday, 17 July 2020
Home »
» `ஸ்வப்னாவுடன் நட்பில் இருந்த சிவசங்கரன் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட்!’ - பினராயி விஜயன் அதிரடி