திருவனந்தபுரம் யு.ஏ.இ தூதரக பார்சல் வழியாகத் தங்கம் கடத்திய வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷை கஸ்டடியில் எடுத்து என்.ஐ.ஏ விசாராணை நடத்தி வருகிறது. அவரது போன் அழைப்பு விவரங்களைத் திரட்டியபோது அதில், கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீல், அவரது உதவியாளர் என பலருடன் பேசியிருந்தது தெரியவந்துள்ளது. மேலும், யு.ஏ.இ கவுன்சில் ஜெனரல், அவரது கன்மேன் ஜெயகோஷ் மற்றும் கவுன்சில் ஜெனரல் அலுவலகத்தில் பணிபுரியும் அட்டாஷே (Attaché) ராஷத் அல் ஷெமீல் ஆகியோருடன் ஸ்வப்னா சுரேஷ் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. இவர்களை விசாராணை நடத்த என்.ஐ.ஏ நடவடிக்கை எடுத்துள்ளது. யு.ஏ.இ கவுன்சில் ஜெனரல் இந்தியாவில் இல்லை. அவரது நாட்டில்தான் இருக்கிறாராம். இந்த நிலையில் தூதரக அட்டாஷே ராஷத் அல் ஷெமீல் நேற்று டெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் யு.ஏ.இ-க்கு பறந்துவிட்டார். இது பி.ஜே.பி அரசின் வீழ்ச்சி என சி.பி.எம் விமர்சனம் செய்தது. இந்தநிலையில், யு.ஏ.இ கவுன்சில் ஜெனரலின் கன்மேன் ஜெயகோஷை நேற்று முதல் காணவில்லை என அவரது உறவினர்கள் திருவனந்தபுரம் தும்பா காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.யு.ஏ.இ தூதரக கன்மேன் ஜெயகோஷ்
யு.ஏ.இ கவுன்சில் ஜெனரலின் கன்மேன் ஜெயகோஷ் திருவனந்தபுரம் ஆயுதப்படையைச் சேர்ந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளாக யு.ஏ.இ கவுன்சில் ஜெனரலின் கன்மேனாக இருக்கிறார். தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்படுள்ள ஸரித் மற்றும் ஸ்வப்னா ஆகியோர் கன்மேன் ஜெயகோஷிடம் போனில் பேசியுள்ளதாகவும், இவரும் அவர்களை போனில் தொடர்புகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு திருவனந்தபுரம் விமான நிலைய குடியேற்றத்துறை கவுண்டரில் பணியில் இருந்திருக்கிறார் ஜெயகோஷ். இந்த நிலையில் ஜெயகோஷுக்கு மிரட்டல் இருந்ததாகவும் உறவினர்கள் கூறியிருந்தனர்.
`நாம் நினைப்பதைவிட, அது பெரிய கும்பல்’ என தன் மனைவியிடம் ஜெயகோஷ் கூறியிருந்ததாகவும். மனஉளைச்சலுக்கு ஆளானவர் தும்பாவில் உள்ள அவரின் மனைவி வீட்டுக்குச் சென்ற நிலையில் காணவில்லை என போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. கஸ்டம்ஸ் அல்லது என்.ஐ.ஏ விசாரணைக்காக ஜெயகோஷை அழைத்துச் செல்லவில்லை என்றும், பைக்கில் வந்த 2 பேர் மிரட்டிவிட்டுச் சென்றதாகவும் அவரின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியதை அடுத்து ஜெயகோஷின் துப்பாக்கியை ஒப்படைக்கும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். நேற்று துப்பாக்கியை ஒப்படைத்த நிலையில் அவர், காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பைக் கிளப்பியது.ஸ்வப்னா சுரேஷ்
தும்பா போலீஸார் ஜெயகோஷின் மொபைல் போன் சிக்னலை இருந்த பகுதியை ஆய்வு செய்தபோது வீட்டுக்கு அருகிலேயே இருப்பத்தாகக் காட்டியது. இதைத் தொடர்ந்து அவரது வீட்டின் பின்பக்கம் உள்ள புதர் காட்டில், போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது புதர்காட்டில் பதுங்கி இருந்த ஜெயகோஷ், போலீஸைக் கண்டதும் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் இடது கை நரம்பை கிழித்துள்ளார். மேலும், அவர் பிளேடுகளை விழுங்கியதாகவும் கூறப்படுகிறது. போலீஸார் விரைந்து அவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸார் தூக்கிச் செல்லும்போது, `நான் நிரபராதி. தவறு செய்யவில்லை’ என புலம்பியபடி இருந்தார் ஜெயகோஷ். மருத்துவமனையில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
http://dlvr.it/Rbr6t5
Saturday, 18 July 2020
Home »
» ஸ்வப்னாவின் கான்டாக்ட்: பிளேடால் கை அறுப்பு! - தங்கம் கடத்தலில் சிக்கிய யு.ஏ.இ தூதரக கன்மேன்