தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தக் கொடிய நோய் தொற்றுக் காலகட்டத்திலும் குற்றங்கள் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. கேரளாவில் தங்கக் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தினசரி பல்வேறு திருப்பங்களைச் சந்தித்து வருகிறது தங்கக் கடத்தல் வழக்கு.வாளையார்
Also Read: `ஹவாலா மூலம் பணமாற்றம்?’- கல்கி ஆசிரமத்துக்குச் சொந்தமான ரூ.1000 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்
இந்நிலையில், கோவை அருகே உள்ள தமிழக - கேரள எல்லையான வாளையார் பகுதியில் ஹவாலா மோசடி விவகாரத்தில், கடந்த 4 நாள்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு அமலில் இருப்பதால், வாளையார் பகுதியில் கடுமையான சோதனைக்குப் பிறகு வாகனங்கள் இரண்டு மாநில எல்லைகளிலும் அனுமதிக்கப்படுகின்றன. இதனிடையே, கடந்த 6-ம் தேதி காய்கறி ஏற்றிச் செல்லும் வாகனத்தை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் 2,000 ரூபாய் நோட்டு கட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் வீதம் ரூ.1.75 கோடி பணம் இருந்தது தெரியவந்தது.ஹவாலா கைது
இதுதொடர்பாக அந்த வாகனத்தில் வந்த ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த நிதின்குட்டி, சலாம் ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அது ஹவாலா பணம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை வாளையார் போலீஸார் கைது செய்தனர்.
அதே வாளையார் பகுதியில் நேற்று ஒரு சரக்கு வாகனத்தை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, 62 கட்டுகள் அடங்கிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 7 கட்டுகள் அடங்கிய 2,000 ரூபாய் நோட்டுகள் வீதம் ரூ.45 லட்சம் மதிப்பிலான ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கோவை, ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்த சம்பத்குமார், கெம்பட்டிகாலனி பகுதியைச் சேர்ந்த குருசாமி ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.ஹவாலா கைது
அவர்கள், கோவையில் இருந்து திருச்சூருக்கு ஹவாலா பணம் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://dlvr.it/RbPm9d
Saturday, 11 July 2020
Home »
» ஹவாலா பணம்: `கட்டுக் கட்டாக நோட்டுகள்’ - வாளையார் பகுதியில் சிக்கும் மோசடிக் கும்பல்