நைரோபி: கென்யாவில் வெட்டுக்கிளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டு அதனை அந்நாட்டு விவசாயத்துறை அதிகாரிகள் பயன்படுத்தி வருகிறார். ஆப்ரிக்க நாடுகளில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வருகின்றன. கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகள் ஹெலிகாப்டர்கள் மூலம் தெளிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. எண்ணற்ற வெட்டுக்கிளிகள் கடந்த வாரங்களில் முதிர்ச்சியடைந்து பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. அவை இன்னும் ஒரு சில வாரங்களில் படையெடுத்து வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு அதிகரித்துள்ளதால் கென்யா விவசாயத்துறை அதிகாரிகள் அவற்றை அழிக்க முடிவெடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் E-Locusts என்ற மொபைல் ஆப் -யை அவர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஊர்க்காவல்படையினர், கூட்டமாககத் திரியும் வெட்டுக்கிளிகளை படம் பிடித்து, அவை அடுத்து செல்லும் திசையை இந்த ஆப்பில் பதிவேற்றம் செய்கின்றனர். இந்தத் தகவல்களின் அடிப்படையில் வெட்டுக்கிளிகளின் வருகையை முன் கூட்டியே கணிக்கும் விவசாயத் துறை அதிகாரிகள், வெட்டுக்கிளிகளை அழிக்க பூச்சிக்கொல்லிகளுடன் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.