இந்தியா, சீனா இடையிலான மோதல் மட்டுமல்லாமல், எந்த நாட்டு பிரச்சினையிலும் வலிமையான நட்புறவுக்கு, அமெரிக்க ராணுவம் துணையாக நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். கிழக்கு லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறது சீனா. இந்தியா, சீனா ராணுவத்துக்கு இடையிலான மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். நம்ப முடியாது..
சீனப் படையினர் வாபஸானாலும்.. உஷார் நிலையைக் கைவிடாத இந்தியா! தென் சீனக் கடலுக்கு விரைந்த அமெரிக்க கப்பல்கள் இது மட்டுமல்ல, தென் சீனக் கடலில் பல தீவுகளை சீனா ஆக்கிரமித்து வருகிறது. பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகள் இப்படியான குற்றச்சாட்டுகளை சீனா மீது தொடர்ந்து முன்வைத்து வருகின்றன. சீனாவுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதிக்கு இரு விமானம் தாங்கி கப்பல்களை அமெரிக்கா அதிரடியாக அனுப்பி வைத்துள்ளது.
ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம் இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மீடோஸ் Fox என்ற செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: ஒரு விஷயத்தை தெளிவாகக் கூறிவிடுகிறோம். ஆசியாவிலோ அல்லது ஐரோப்பிய பிராந்தியத்திலோ, எந்த நாடும் தங்களை சக்தி வாய்ந்தவராக வெளிப்படுத்த மற்ற நாடுகளை அடக்க நாங்கள் விட மாட்டோம். அது சீனாவாக இருந்தாலும் எந்த நாடாக இருந்தாலும்சரி அதற்கு எங்கள் ஆதரவு கிடையாது. இந்தியாவுக்கு ஆதரவு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் மோதல் ஏற்பட்டிருந்தாலும், எங்கள் ராணுவம் நட்புறவுக்கு துணை நிற்கும், தொடர்ந்து வலுவாக நிற்கும்.
சீன ராணுவத்தின் தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டதற்கு, பதிலடியாக சீனாவின் செல்போன் செயலிகளை இந்தியா தடை செய்துள்ளதில் தவறு ஏதும் இல்லை. அமெரிக்க கப்பல்கள் அமெரிக்கா, இரு விமானம் தாங்கி கப்பல்களான ரொனால்ட் ரீகன் மற்றும் நிமிட்ஸ் ஆகியவற்றை தென் சீனக் கடலுக்கு அனுப்பியுள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை நாங்களும் அறிந்து வைத்துள்ளோம். மிகப்பெரிய ராணுவப்படை, வலிமையான சக்தி அமெரிக்காவிடம் உள்ளது என்பதை உலகம் அறிவதற்காகத்தான் இந்த படைகள் அங்கே போயுள்ளன. இவ்வாறு, மார்க் மீடோஸ் தெரிவித்தார்.