கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் உலகளவில் மக்கள் பலரும் தங்களது சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். தங்களை சொந்த நாடுகளுக்கு அனுப்ப உதவிகளைக் கோரியும் அரசாங்கங்களை வலியுறுத்தியும் வருகின்றனர். அரசாங்கங்களும் உரிய நடவடிக்கைகளை அவ்வப்போது எடுத்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவுக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் அமெரிக்காவுக்குத் திரும்ப செல்ல விருப்பம் இல்லை என்றும் கேரளாவிலேயே இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் பலரிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளா
அமெரிக்காவைச் சேர்ந்த 74 வயதான நபர் ஜானி பால் பியர்ஸ். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு கேரளாவுக்கு வந்துள்ளார். இந்த ஐந்து மாதங்களும் அவருக்கு மறக்க முடியாத இதமான அனுமபவமாக இருந்ததால் தனது மீதமுள்ள வாழ்நாள் முழவதையும் கடவுளின் சொந்த தேசத்திலேயே கழிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், தனது சுற்றுலா விசாவை பிசினஸ் விசாவாக மாற்ற கேரளாவின் உயர் நீதி மன்றத்தை அணுகியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``என்னுடைய தற்போதைய விருப்பம் ஐந்து ஆண்டுகளுக்கான பிசினஸ் விசாவைப் பெறுவதுதான்” என்று கூறியுள்ளார். சஜூ எஸ் நாயர் என்ற வழக்கறிஞர் மூலமாக அவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
Also Read: வாகமன்... அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகத்துக்கு ஒரு டூர்! ஊர் சுத்தலாம் வாங்க...!
இந்தியாவில் குடியுரிமைப் பெறுவதற்கு எளிதான வழி இங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்வதுதான் என்று தொடர்ந்து பேசும் ஜானி, ``ஆனால், எனக்கு 74 வயதாகிவிட்டது. எனவே, இந்த வாய்ப்பை நான் கடந்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார். ஜானி தற்போது கேரளாவில் வெளிநாட்டினருக்கான மையம் ஒன்றை அமைத்து அங்குள்ள சுற்றுலாத் திறன் தொடர்பாக ஆராய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடுமையாகப் பரவி வருகிறது. இந்த வயதில் அங்கு செல்வது ஆபத்தானது என்ற ஜானி, ``கேரளாவை மிகவும் நேசிக்கிறேன். நான் கேரளாவில் அதிக பாதுகாப்புடன் இருக்கிறேன். இந்த மாநிலம் முழுவதும் 25 பேர் மட்டும்தான் வைரஸ் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். நான் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை. இங்கேயே அமைதியாக வாழ விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.கேரளா
தொடர்ந்து பேசிய ஜானி, ``வாகமன் பகுதியில் ரிசார்ட் ஒன்றைத் தேடி வருகிறேன். கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியில் இருக்கும் அறைகளைக் கண்டுபிடிப்பேன் என நம்புகிறேன். வாகமன் என்னைப் பொறுத்தவரை மிகவும் சரியான பகுதி. கூட்டமான பகுதிகளில் இருந்து தொலைவில் இருக்க விரும்புகிறேன். என்னுடைய இந்திய நண்பர் ராஜேஷிடம், ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது தொடர்பாகப் பேசி வருகிறேன். அவர் ஒரு திரைக்கதை ஆசிரியர். எனவே, அதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்” என்றும் கூறியுள்ளார்.
ஜானி, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி சுற்றுலா விசாவில் இந்தியா வந்துள்ளார். தற்போது, எர்ணாகுளம் பகுதியில் தங்கியுள்ளார். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் இங்கே சிக்கியுள்ளார். சுற்றுலா பயணியாக இந்தியாவுக்கு ஐந்தாவது முறையாகப் பயணம் வந்துள்ளார். இந்திய அரசின் விதிமுறைகளின்படி சுற்றுலா விசா 180 நாள்கள் மட்டுமே செல்லுபடியாகும். அவரது விசா ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி அன்று காலாவதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கேரளா: `தங்கம் கடத்தல் வழக்கில் அதிகாரிகளுக்கு வந்த அழைப்பு?’ -மாற்றப்பட்ட முதல்வரின் செயலர்
http://dlvr.it/RbBqK2
Wednesday, 8 July 2020
Home »
» கேரளா:`நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை!’ -நீதிமன்றத்தை நாடிய அமெரிக்கர்