சேலத்தில் கென்யா நாட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அதேநாட்டு இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனை 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது. கென்யா நாட்டைச் சேர்ந்த எரிக் முலின் துலி என்பவரும், அதே நாட்டை சேர்ந்த பெண்ணும் சேலம் தனியார் கல்லூரியில் மேற்படிப்பு படித்தனர். 2016ல் மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த எரிக் முலின், பாலியல் வன்கொடுமை செய்துதுடன், கொலை செய்ய முயற்சித்தார். இச்சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது. அத்துடன் சேலம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் முலின் துலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எரிக் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் ஆகியோர், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தனர்.
http://dlvr.it/Rf6tyw
Saturday, 22 August 2020
Home »
» பாலியல் வன்கொடுமை வழக்கு : ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்த உயர்நீதிமன்றம்