ஜார்ஜியா நாட்டில் முகாம் ஒன்றில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம். கடந்த ஜூன் 21 முதல் 27 வரை நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 597 பேர் பங்கேற்றுள்ளனர். 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 13 முதல் 17 வயதுக்குட்பட்ட டீன் ஏஜ் பிள்ளைகள், 21 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் என வெவ்வேறு வயதினர் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த முகாமில் பங்கேற்று கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களில் 51 சதவிகிதம் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23 அன்று பங்கேற்றவர்களில் டீனேஜ் பிள்ளைக்கு குளிர் காய்ச்சல் இருந்ததால் முகாமை விட்டு வெளியேறியுள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் முகாம் பாதியில் நிறுத்தப்பட்டுட்டள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் பரிசோதனை செய்ததில் சுமார் 260 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர் சுகாதார துறை அதிகாரிகள். இந்தியாவில் தற்போது ஊரடங்கு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது. பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஜார்ஜியாவில் குழந்தைகளும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதை இந்திய அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும். அனைத்தையும் குழுவாகவே செய்து பழகிய குழந்தைகளிடையே சமூக பரவல் அதிகம் ஏற்படுவதை இந்நிகழ்வு வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
http://dlvr.it/Rcq1nx
Sunday, 2 August 2020
Home »
» ஒரே முகாமில் பங்கேற்ற 200 குழந்தைகளுக்கு கொரோனா .. ஜார்ஜியாவில் அதிர்ச்சி!!