மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பலத்த மழை பெய்ததால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலையில் இடுப்பளவு தேங்கியிருக்கும் நீரால் வாக ஓட்டிகள் கடுமையான சிரமத்தைச் சந்தித்துள்ளனர். மேலும், மும்பையில் வாழும் 20 லட்சம் மக்களின் உயிர் நாடியாக இருக்கும் மின்சார ரயில் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.மும்பை மழை
செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மும்பையில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாள்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை தவிர மகாராஷ்டிராவின் தானே, புனே, ராய்காட் போன்ற மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் இன்று மூடப்பட்டுள்ளன.
Also Read: மும்பை: `குடிசைப் பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகம்!’ - ஆய்வில் தகவல்
இது தொடர்பாக மும்பை மாநகராட்சி மக்களுக்கு ஆலோசனை வழங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ``இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி மும்பை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் இன்று அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை மக்கள் மிகவும் அத்தியாவசியமான தேவைகளைத் தவிர மற்றவற்றுக்கு வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த அறிக்கையில், ``மும்பை நகரில் கடந்த 48 மணி நேரத்தில் 140.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளின் முறையே 84.77 மிமீ மற்றும் 79.27 மி.மீ மழை பதிவாகியுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மும்பை மழை
மும்பையில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மும்பையின் மழைப்பொழிவு புகைப்படங்கள் சமூக வலைதளத்தை நிரப்பியுள்ளன. `2005-ம் ஆண்டுக்குப் பிறக்கு இப்படி ஒரு மழையைப் பார்த்ததில்லை’, `மீண்டும் இப்படி ஒரு மழைப் பொழிவு வேண்டாம்’, ‘மும்பைக்கான சோதனைகள் போதும் கடவுளே’ எனக் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்திய நகரங்களிலேயே மும்பையில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இந்நிலையில் அங்கு பெய்து வரும் கனமழை மக்களை வேதனைக்குள்ளாகியுள்ளது.
http://dlvr.it/Rd0WWM
Wednesday, 5 August 2020
Home »
» மும்பை: `2005-க்குப் பிறகு இப்படி ஒரு நிகழ்வைப் பார்த்ததில்லை!’ - கனமழையால் தவிக்கும் மக்கள்