கர்நாடகாவின் பெங்களூரில் காங்கிரஸைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான நவீன் என்பவர் இஸ்லாமியர்களை குறித்து அவதூறாக ஃபேஸ்உக் பக்கத்தில் பதிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பதிவானது சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு சர்ச்சையாகியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த இஸ்லாமியர்கள் சட்டமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தி வன்முறைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த காவலதுறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். எனினும், வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடந்துள்ளது. பின்னர், வன்முறையில் ஈடுபட்டவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்துள்ளனர். அங்கிருந்த கடைகளை மூடவும் வற்புறுத்தியுள்ளனர். சாலைகளில் இருந்த் வாகனங்களின் டயர்களிலும் தீ வைத்துள்ளனர்.
Karnataka: DJ Halli Police Station in Bengaluru city vandalised last night, as violence broke out over an alleged inciting social media post.
Sec 144 imposed in city, curfew in DJ Halli & KG Halli police station limits. At least 2 dead, 110 arrested, 60 Police personnel injured. pic.twitter.com/FVgUIanWgd— ANI (@ANI) August 12, 2020
வன்முறையால் ஏற்பட்ட தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்களையும் அங்கிருந்தவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஃபேஸ்புக்கில் பதிவிட்டவரை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைக் காவல்துறையினர் எடுக்க தவறியதாகக் கூறி காவல்நிலையத்தில் இருந்த வாகனங்களிலும் போராட்டக்காரர்கள் தீ வைத்து தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். பல்வேறு வகைகளிலும் கடுமையாக நடந்த போராட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை அதிகாரிகள் திணறியுள்ளனர். கண்ணீர் புகைக்குண்டுகள் வீச்சு, தடியடி ஆகிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.
எனினும், அடங்காத வன்முறையை அடக்க காவலர்கள் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பத்தில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 60 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுமார் 110 பேரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலைமை இன்னும் மோசமாகாமல் இருக்க 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
Also Read: `துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்!’ - டெல்லி மெட்ரோவில் எதிரொலித்த வன்முறை கோஷங்கள்
சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீனிவாசமூர்த்தி இந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது, ``எனது சகோதரி மகனின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த பதிவுக்கும் எனக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. இந்தப் பதிவு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது. இத்தகைய பதிவை சமூக வலைதளத்தில் பதிவிட்டவரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அவரது உறவினர் நவீன் என்பவர் இதுதொடர்பாக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணைகயும் நடைபெற்று வருகிறது. ஆனால், நவீன் என்பவர் தனது ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் தான் அந்தப் பதிவை பகிரவில்லை என்றும் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக்காரர்கள் சட்டமன்ற உறுப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காவல்நிலையம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால், தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Karnataka: Visuals from Bengaluru's DJ Halli Police Station area where violence broke out over an alleged inciting social media post.
Two people died & around 60 police personnel sustained injuries in the violence in Bengaluru, according to Police Commissioner Kamal Pant. pic.twitter.com/QsAALZycs0— ANI (@ANI) August 11, 2020
அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பஸவராஜ் பொம்மை இந்த சம்பவம் தொடர்பாக பேசும்போது, ``இந்த பிரச்னை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம். வன்முறை சம்பவங்களுக்கு பின்னால் உள்ளவர்களை சிசிடிவி காட்சிகளை வைத்துக் கண்டுபிடிப்போம். அவர்கள் மீது கடுமையான நடவடிக்ககையும் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல் எடியூரப்பா இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ``வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்றிரவு நடந்த வன்முறைகளில் பத்திரிக்கையாளர், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் எதிர்பாராத ஒன்று. இத்தகைய செயல்களை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. நிச்சயம் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட பலரும் மக்களை அமைதியுடன் இருக்க வேண்டுகோளும் விடுத்து வருகின்றனர்.
Also Read: `டெல்லி வன்முறை வழக்கு!’ - கைதான கர்ப்பிணி மாணவி சஃபூராவுக்கு ஜாமீன்
http://dlvr.it/RdVB6l
Wednesday, 12 August 2020
Home »
» `ஃபேஸ்புக் பதிவு; எம்.எல்.ஏ சர்ச்சை!’ - பெங்களூரை அதிரவைத்த திடீர் வன்முறை; 3 பேர் பலி