கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்களில் ஒன்று மூணாறு. தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மூணாறில் வசிக்கும் பெரும்பாலனோர் தமிழர்கள். நல்லதண்ணி எஸ்டேட், கண்ணன் தேவன் தேயிலை எஸ்டேட் என ஆங்காங்கு உள்ள தேயிலை எஸ்டேட்டில், வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தால் கட்டிக்கொடுக்கப்படும் வீடுகளில் வசித்துவருகின்றனர். மூணாறு
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பருமழை காரணமாக, மூணாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம், போக்குவரத்து ஆகியவை துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று அதிகாலை, ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி என்கிற பகுதியில் அமைந்துள்ள தேயிலை எஸ்ட்டேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, எஸ்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த நான்கு லைன் குடியிருப்புகள் மண்ணில் சரிந்தன. இதில், வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த சுமார் 80 பேர் வரை இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், தற்போது 5 பேர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூணாறு
Also Read: `283 நிலச்சரிவு அபாய பகுதிகளில் 48 குழுக்கள்!' - இரண்டாம் பேரிடரை எதிர்கொள்ளத் தயாராகும் நீலகிரி
இது தொடர்பாக மூணாறு வாசி ஒருவர் நம்மிடையே தெரிவிக்கும்போது, ``இரவில் இருந்தே கடுமையான மழை பெய்துவந்தது. இப்போது ராஜமலை அருகே பெரிய நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. போன், மின்சாரம், சாலை அனைத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மூணாறில் இருந்து 16 கிலோமீட்டர் தூரம் இருக்கும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்குச் செல்ல பெரியவாரை பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். அந்தப் பாலம், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதால், மீட்புப் பணிக்குச் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மாற்றுப்பாதையில் மீட்புக் குழுவினர் செல்லத் திட்டமிட்டிருக்கிறார்கள்” என்றார் பதற்றமான குரலில்.
http://dlvr.it/RdBY0Q
Friday, 7 August 2020
Home »
» மூணாறு: நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் - 80 பேர் இறந்திருக்கலாம் என அச்சம்!