கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு துபாயில் இருந்து வந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 184 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 190 பேர் விபத்தில் சிக்கினர். அவர்களை காப்பாற்ற பொதுமக்கள், போலீஸ் அதிகாரிகள், தீயணைப்பு வீரகளும் களம் இறங்கினர். காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். கொரோனாவை பற்றி கவலைப்படாமல் பொதுமக்கள் உடனடியாக மீட்புப்பணியில் ஈடுபட்டதற்கு அனைத்து தரப்பினரும் பாராட்டை தெரிவித்தனர். ஏர் இந்தியா நிறுவனமும் மீட்புப்பணியில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு பாராட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தைரியமாக மட்டுமல்லாது, மனித நேயத்தோடும் மலப்புறம் மக்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.மலப்புரம் கலெக்டர் கோபால கிருஷ்ணன்
விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்த அனைவரும் காயம் அடைந்தனர். பைலட், துணை பைலட் உட்பட18 பேர் மரணமடைந்த நிலையில் மீதமுள்ளவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். அதில் 23 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 57-க்கும் மேற்பட்டவர்கள் வீடு திரும்பிய நிலையில் இப்போது சுமார் 120 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த நிலையில் விமான விபத்தில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட பொதுமக்கள், போலீஸ் மற்றும் அதிகாரிகளை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக மீட்புப்பணியில் களத்தில் இறங்கி செயல்பட்ட மலப்புறம் மாவட்ட கலெக்டர் கோபாலகிருஷ்ணன் க்வாரன்டைனில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 42 பேரும். தீயணைப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட 72 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.கோழிக்கோடு விமான விபத்து
இது ஒருபுறம் இருக்க மீட்புப் பணியில் ஈடுபட்டதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நேரில் சென்று சல்யூட் அடித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மலப்புறம் சிவில் போலீஸ் ஆப்பீசஸ் ஹுசைன். இந்த புகைப்படங்கள் வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து விவாதத்தை கிளப்பியது. இதையடுத்து டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என மலப்புறம் எஸ்.பி. அப்துல் கரீம் அறிவித்துள்ளார்.
http://dlvr.it/RdLlqm
Monday, 10 August 2020
Home »
» `விமான விபத்தில் இறந்தவருக்கு கொரோனா; க்வாரன்டைனில் கலெக்டர்!’ - சர்ச்சையில் சிக்கிய போலீஸ்