கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டம் கொப்பல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஸ்ரீனிவாச குப்தா. இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன் இரு மகள்களுடன் காரில் திருப்பதி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஸ்ரீனிவாச குப்தாவின் மனைவி மாதவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குப்தாவின் இரண்டு மகள்களும் சிறிய காயங்களுக்குப் பிறகு குணமடைந்துள்ளனர்.சிலிகான் சிலை
தங்களுக்கென பெரிய பங்களாவைக் கட்ட வேண்டும் என்பது மாதவியின் கனவாக இருந்துள்ளது. தன் மனைவி இறந்த பிறகு அவரது நினைவாகவும் அவரது கனவை நிறைவேற்றும் விதமாகவும் ஒரு பங்களாவைக் கட்ட முடிவு செய்துள்ளார் ஸ்ரீனிவாச குப்தா. இது தொடர்பாகப் பேசியுள்ள அவர், “நான் தலைமுடிகள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறேன். என் மகளுக்காகப் பெரிய வீடு கட்ட வேண்டும் என்பது என் மனைவியின் ஆசை. ஆனால் அவர் விபத்தில் உயிரிழந்த பிறகு அவரது நினைவாகவே ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என நான் நினைத்தேன். இதற்காகக் கடந்த 2 வருடங்களாகப் பல கட்டட கலைஞர்களைச் சந்தித்தேன், ஆனால் யாரும் என் விருப்பத்துக்கு ஏற்றார் போல் யோசனை சொல்லவில்லை.
Also Read: புற்றுநோய் பாதித்த தாய்க்கு மருத்துவம் செய்ய பணமில்லை - சுயமாக மருந்து தயாரித்த மகன்!
பிறகு என் தொழில் விஷயம் தொடர்பாக கடாக் சென்றபோது. என் வந்த சக தொழிலாளர் ஒருவர் மகேஷ் என்ற கட்டட கலைஞர் பற்றிக் கூறினார். அவரை சந்தித்து என் மனதில் இருக்கும் எண்ணத்தைக் கூறினேன். அவர் மிகவும் சிறந்த யோசனையை எங்களுக்கு வழங்கினார். என் மனைவியின் உருவத்தைச் சிலையாக வடித்து வீட்டில் வைக்க வேண்டும் என கூறினார். அதன்படி அவர் கூறிய சிலை செய்யும் கலைஞரைச் சந்தித்து என் மனைவியின் சிலையைச் செய்ய வேண்டும் என ஆர்டர் கொடுத்தேன். அவரும் அச்சு அசலாக என் மனைவியின் உருவத்தைப் போலவே சிலை செய்து கொடுத்துள்ளார்” என நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.கர்நாடகா
ஸ்ரீனிவாச குப்தாவின் வீட்டு கிரகபிரவேசம் கடந்த 8-ம் தேதி நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் அனைவரும் மாதவியின் சிலை கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர். அச்சு அசலாக மாதவியே நேரில் வந்து சோஃபாவில் அமர்ந்திருப்பதைப் போலவே சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலிகானால் செய்யப்பட்ட இந்த சிலைக்கு மாதவிக்கு மிகவும் பிடித்த பிங்க் நிறத்தாலான புடவை கட்டி, நகைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. மாதவியின் சிலையுடன் அமர்ந்து. வீட்டுக்கான அனைத்து சடங்குகளையும் செய்துள்ளார் ஸ்ரீனிவாச குப்தா. இருவரும் இணைந்து அமர்ந்திருக்கும் புகைப்படமும், மாதவியின் மகள்கள் அவருக்குப் பாத பூஜை செய்யும் படங்கள் ஆகியவை இணையத்தில் வைரலாகியுள்ளன.
‘இது என் கனவு இல்லமாக இருந்ததால் அங்கு என் மனைவியை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்தது போன்ற ஒரு பெரிய உணர்வைத் தருகிறது. மாதவி மீண்டு வந்தது போல உள்ளது. என் மனைவியின் சிலையைத் தயாரிக்கப் பெங்களூருவைச் சேர்ந்த சிலை கலைஞர் ஸ்ரீதர் மூர்த்திக்கு ஒரு வருடம் ஆனது” எனத் தெரிவித்துள்ளார். இறந்த தன் மனைவிக்குச் சிலை வைத்த கணவரின் செயல் பார்ப்பவர்களை நெகிழவைத்துள்ளது.
http://dlvr.it/RdQQ9n
Tuesday, 11 August 2020
Home »
» கர்நாடகா: `மாதவி மீண்டு வந்தது போல உள்ளது!’ - மனைவிக்குத் தத்ரூபமாக சிலை வைத்த கணவர்