கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில், ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும், அங்கு ஏலக்காய் தோட்டங்களைச் சொந்தமாக வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலம் முதல், தற்போது வரை சுமார் 4 மாதங்களாக, தங்களுடைய ஏலக்காய் தோட்டங்களுக்குச் சென்றுவர, விவசாயிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால், ஏலக்காய் தோட்டங்கள் சேதமடைந்துள்ளன.மழையால் சேதமடைந்த ஏலக்காய்ச் செடிகள்
Also Read: `சுரங்கம் தோண்டினால் இடுக்கி நொறுங்கும்; முல்லைப் பெரியாறு உடையும்’- மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை
இது தொடர்பாகப் பேசிய ஏலக்காய் விவசாயி, “இடுக்கி மாவட்டத்தில், வண்டிப்பெரியாறு, பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிக்குளம் ஆகிய இடங்களில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளன. இவை பெரும்பாலும், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்குச் சொந்தமானது. இது ஏலக்காய் பறிப்பதற்கான சீசன். இப்போது பெய்துவரும் கன மழை, ஏலச் செடிகளை நீரில் மூழ்க வைத்துவிட்டது. சூறைக்காற்றால், செடிகள் முறிந்துள்ளன. சுமார் 800 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட ஏலக்காய் தோட்டங்கள் கனமழையால் சேதமடைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு சுமார் ரூ. 120 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. நீரில் மூழ்கிய ஏலக்காய்த் தோட்டம்
Also Read: மூணாறு நிலச்சரிவு: மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை #SpotVisit
மேலும், ரூ. 7 கோடி மதிப்பிலான மிளகுப் பயிர்களும் சேதமடைந்துள்ளது. நேரடியாக 2,000 விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கொரோனா ஆரம்பித்தபோது, மாநில எல்லை மூடப்பட்டு, இ.பாஸ் கிடைக்காமல், தோட்டங்களுக்குச் செல்ல முடியாத நிலை உருவாகி, விவசாயிகள் தவித்தனர். இப்போது மழை பெய்து, தோட்டங்களை அழிக்கிறது. ஏலக்காய் விவசாயிகளுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கப்போகுதோ தெரியல” என்றார் வேதனையோடு.மழையால் சேதமடைந்த ஏலக்காய்ச் செடிகள்
இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால், மூணாறு ராஜமலை அருகே உள்ள பெட்டிமுடி எனும் இடத்தில், தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்பு நிலச்சரிவில் சிக்கி, 71 பேர் பலியாகினர். மண்ணில் புதைந்துள்ள உடல்களைத் தேடும் பணி இன்று 7வது நாளாகத் தொடரும் நிலையில், ஒட்டுமொத்த இடுக்கி மாவட்டத்திலும், மழையால் 110 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும், 20-க்கு மேற்பட்ட குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
http://dlvr.it/RdYw7k
Thursday, 13 August 2020
Home »
» இடுக்கி கனமழை: `நீரில் மூழ்கிய ஏலக்காய் தோட்டங்கள்!’ - தவிக்கும் தமிழக விவசாயிகள்