Also Read: மூணாறு: `கண்டன கோஷத்துடன் பினராயி விஜயன் காரை மறித்த பெண்!’ - யார் இந்த கோமதி?
தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருந்து, அரிசி, பருப்பு, முட்டை என உணவுப் பொருட்களில் ஆரம்பித்து, கட்டடம் கட்டத் தேவையான மணல், ஜல்லி, சிமெண்ட் உட்பட அனைத்து விதமானப் பொருள்களும் லாரிகளில் தினம்தோறும் இடுக்கி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில், தேனியில் இருந்து சமீபத்தில் கட்டப்பனை அருகே ஜல்லிக் கற்களை ஏற்றிச்சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி மீது கற்களை வீசித் தாக்கியுள்ளனர் கேரள லாரி உரிமையாளர்கள். டிப்பர் லாரி
இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கட்டபனை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த, தேனி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கம்பம் மெட்டு அருகே, 20-க்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி ஒருநாள் அடையாளப் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தேனி டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், ``கேரளாவில் மணல் அள்ளுவதற்கும், மலைகளை உடைத்து ஜல்லிக் கற்கள் எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் உள்ளது. அதனால், தமிழகத்தில் இருந்துதான் மணல், ஜல்லிக்கற்கள் போன்றவை கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும். அவற்றை டிப்பர் லாரிகள் மூலம் நாங்கள் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வோம். கடந்த காலங்களில், பொருள்கள் தேவைப்படுவோரிடம் நேரடியாக டெலிவரி செய்து கொண்டிருந்தோம். கொரோனா ஊரடங்குக்குப் பிறகான தளர்வுகளில், எங்களுக்கு கேரளாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
Also Read: மூணாறு நிலச்சரிவு: 7 நாள்களுக்குப் பிறகு பெட்டிமுடி சென்ற கேரள முதல்வர்!போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள்
கேரளாவைச் சேர்ந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள், எல்லையைக் கடந்து எங்களிடம் பொருள்களை ஒப்படைக்குமாறும், நாங்கள் டெலிவரி செய்வதாகவும் கூறினர். அதற்கு நாங்களும் ஒப்புக்கொண்டு, ஸ்டாக் பாயிண்ட் அமைத்து, தேனியில் இருந்து செல்லும் லாரிகள், அங்கே உள்ள லாரிகளில் பொருள்களை மாற்றிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தன.
சில நேரங்களில், பெரிய ஆர்டராக இருந்தால், நாங்களே நேரடியாக டெலிவரி செய்வோம். எங்களைப் போல, கேரளா டிப்பர் லாரிகள், தேனி குவாரிகளுக்கு வந்து நேரடியாக பொருள்களை ஏற்றிச் செல்லும். எனவே, இருதரப்பும் சுமூகமாக சென்றுகொண்டிருந்தது. சில வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் நேரடியாக சப்ளை செய்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. கடந்த சில வாரங்களாக, தேனி டிப்பர் லாரி ஓட்டுநர்களை மிரட்டிய வண்ணம் இருந்தனர். டிப்பர் லாரிகள்
சில தினங்களுக்கு முன்னர், கட்டபனை அருகே உள்ள அணைக்கரைப்பட்டி எனும் ஊருக்கு, தேனியில் இருந்து சென்ற டிப்பர் லாரியை, அங்குள்ள லாரி உரிமையாளர்கள் கல்லால் அடித்து கண்ணாடியை சேதப்படுத்தி, ஓட்டுநரை அடித்து மிரட்டினர். உடனே, கட்டபனை டி.எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தோம். ஆனால், இப்போதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான். கேரளாவுக்குத் தேவையான கட்டுமானப் பொருள்கள் அனைத்தும் தேனி வழியாகச் சென்றுகொண்டிருக்கிறது. அதனை எங்களால் தடுக்க முடியும். அது எங்கள் நோக்கம் இல்லை. அதேபோல, கேரள லாரிகள் தமிழக எல்லைக்குள் வந்தால், எங்களாலும் அடிக்க முடியும். அவர்கள் செய்ததுபோல, நாங்கள் செய்ய மாட்டோம்.
Also Read: தேனி: `அழிக்கப்பட்ட படம்; சிக்க வைத்த செல்போன்!’ - கொலை வழக்கில் நீதிமன்றம் அதிரடி
எதோ ஒரு வகையில், இந்தப் பிரச்னை பெரிதாக மாறினால், அது இருமாநில பிரச்னையாக உருமாறிவிடும். தேனி, இடுக்கி மாவட்ட உயர் அதிகாரிகள், இந்த விவகாரத்தில் பேசி, லாரியை கல்லால் அடித்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்” என்றார் காட்டமாக.
இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் பேசிய போது,``இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்பதோடு முடித்துக் கொண்டார்.
http://dlvr.it/Rdp3fM
Monday, 17 August 2020
Home »
» `கேரளாவில் தாக்கப்படும் தேனி லாரிகள்; இருமாநிலப் பிரச்னை அபாயம்!’ - கொதிக்கும் உரிமையாளர்கள்