தேனியில் கொரோனா பாதிப்பில் இறந்த பெண்ணின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரத் தாமதமானதால், பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் மயானத்திற்கு கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் 14 ஆவது வார்டு அழகு பிள்ளைத் தெருவைச் சேர்ந்த ஒருப் பெண்ணுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து அவரது பேரன் அவரை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியானது.இதனையடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்தப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை இறந்தார். இதனையடுத்து இந்தத் தகவலானது கூடலூர் நகராட்சி சுகாதாரப் பிரிவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இறந்தப் பெண்ணின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் அனுப்பவதாக கூறியுள்ளனர். ஆனால் 12 மணி நேரமாகியும் அங்கு ஆம்புலன்ஸ் வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் பெண்ணின் உடலை எடுக்குமாறு வற்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதனைதொடர்ந்து இறந்த மூதாட்டியின் பேரன் நகராட்சி சுகாதாரப் பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கிருந்தும் சரியான தகவல் கொடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த இறந்தப் பெண்ணின் பேரன் வாடகைக்கு தள்ளுவண்டியை எடுத்து, மூதாட்டியின் சடலத்தை மயானத்திற்கு எடுத்து சென்றுள்ளார். தொற்று பாதித்தவரின் உடலை பாதுகாப்பு இல்லாமல் தள்ளுவண்டியில், முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அலட்சியமாக நடந்துகொண்ட சுகாதார துறையினர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
http://dlvr.it/Rcq1nb
Sunday, 2 August 2020
Home »
» கொரோனாவால் இறந்த தாய்.. தாமதமான ஆம்புலன்ஸ்.. தள்ளுவண்டியில் கொண்டு சென்ற பேரன்!!