கேரள மாநிலம், மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடிப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் 25 வீடுகளில் வசித்த 82 பேர் சிக்கினர். இச்சம்பவத்தில் 71 நபர்கள் பலியான நிலையில், இதுவரை 55 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 16 நபர்களின் உடல்களைத் தேடும் பணி 8-வது நாளாகத் தொடர்ந்து நடந்துவருகிறது. `நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகே ஓடக்கூடிய நீரோடையில் உடல்கள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம்’ என்ற கோணத்தில், உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மீட்புக்குழுவினர்.பினராயி விஜயன்
Also Read: மூணாறு நிலச்சரிவு: மீட்புப் பணியில் பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை #SpotVisit
இந்நிலையில், நேற்று, ஹெலிகாப்டர் மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயனும், மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானும் மூணாறு வந்தனர். நிலச்சரிவில் சிக்கி, படுகாயத்துடன் மீட்கப்பட்டு மூணாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை இருவரும் நேரில் சென்று சந்தித்துப் பேசினர். தொடர்ந்து சம்பவம் நடந்த பெட்டிமுடிக்கு இருவரும் காரில் புறப்பட்டனர்.பெட்டிமுடியில் பினராயி விஜயன்
வழியில், மூணாறுவாசிகள், கட்சியினர் எனப் பலரும் பினராயி விஜயனைப் பார்க்க சாலையோரம் கூடியிருந்தனர். அப்போது சட்டென பினராயி விஜயனின் காரின் முன் சென்ற ஒரு பெண், கண்டன முழக்கங்களை எழுப்பினார். பாதுகாப்பிலிருந்த போலீஸார் உடனடியாக அந்தப் பெண்ணை குண்டுக்கட்டாகத் தூக்கி சாலையின் ஓரத்தில் கொண்டுவந்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Also Read: மூணாறு நிலச்சரிவு: `250 பேர் கொண்ட குழு; 6-வது நாள்!’ - மீட்புப் பணிகளில் தாமதம் ஏன்?கோமதி
அந்தப் பெண் யார் என விசாரித்தோம்.
2015-ம் ஆண்டு, `மூணாறைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் தமிழக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, பெண்களை ஒன்றிணைத்து, `பெண்கள் உரிமை இயக்கம்’ எனும் அமைப்பை ஏற்படுத்தி போராடியவர் கோமதி என்ற இந்தப் பெண். தற்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவை அடுத்து, `தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்’, `உறுதியான, பாதுகாப்பான வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும்’ எனக் கோரி, கோஷம் எழுப்பி, பினராயி விஜயனின் காரை மறிக்க முயன்றார் கோமதி. அவர்மீது மூணாறு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.கோமதி.
Also Read: மூணாறு நிலச்சரிவு: 7 நாள்களுக்குப் பின்னர் பெட்டிமுடி சென்ற கேரள முதல்வர்!
இதற்கிடையே இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஜின்ஜோன்ஸ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அன்வர் பாலசிங்கம் ஆகிய இருவரும், இடுக்கி மாவத்தில் வசிக்கும் மலையாளம் மற்றும் தமிழ் பேசக்கூடிய மக்களிடையே மோதலைத் தூண்டிவிடும் நோக்கோடு, சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிட்டதாகக் கூறி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புகார் அளித்தது. புகாரின் பேரில், மூணாறு போலீஸார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/Rddcp2
Friday, 14 August 2020
Home »
» மூணாறு: `கண்டன கோஷத்துடன் பினராயி விஜயன் காரை மறித்த பெண்!’ - யார் இந்த கோமதி?