இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் கூறினாலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. தற்போது சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடைகள் திறக்கப்பட்டிருப்பதால் காவல்துறையினர் வியாபாரிகளின் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்களும் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றன.
सुनो दारोगा जी, जिस तरह तुमने गरीब का ठेला पलटा है. उसी के टैक्स से तुम्हे पगार मिलती है. उसी के पैसे से तुम्हारा घर चलता है इसी गरीब के पैसे से तुम्हारा बच्चा पलता है. इसी के टैक्स के पैसे से मौज करते हो. लोकतंत्र है याद रखना जब जनता तुम्हारा ठेला पलटेगी तो बनारस में रोते घूमोगे pic.twitter.com/mVD19KBbZs— Brajesh Misra (@brajeshlive) August 10, 2020
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி பகுதியில் வியாபாரி ஒருவரிடம் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவில் காவலர் ஒருவர் தள்ளு வண்டியில் இருக்கும் மக்காச்சோளத்தை எடுத்து சாலையில் வீசிகிறார். பின்னர், அந்த வண்டியை கீழே கவிழ்க்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சில மணி நேரங்களில் வெளியாகி நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது. கடை திறக்க அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து அந்த வியாபாரி கடை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்தக் காவலர் இத்தகைய முறையில் நடந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: பிரேசில்:`பெண்ணின் கழுத்தில் ஏறி நின்ற காவலர்!’ - பணியிடை நீக்கம் செய்த ஆளுநர்
வீடியோ வைரலானதும் அந்தக் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாரணாசி காவல்துறை வியாபாரியிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ ஒன்றையும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நிதியுதவியும் வழங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் பேசும்போது, ``வாரணாசியில் உள்ள ஷிவ்புர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் வருண் குமார் ஷாஷி மக்காச்சோளத்தை சாலையில் வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தக் காவலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட வியாபாரிக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளனர்.
दिनांक 10-08-2020 को सोशल मीडिया पर वायरल हो रहे वीडियो जिसमें उ0नि0, द्वारा ठेले पर रखे भुट्टे को फेकने/पलट देने का वीडिया वायरल हुआ है। अ0पु0अ0/क्षेत्राधिकारी कैण्ट द्वारा ठेला चालक को नुकसान की भरपाई के रूप में आर्थिक सहायता प्रदान की गयी। @amitpathak09 @Uppolice @dgpup pic.twitter.com/3H6ZbQWr0r— Varanasi Police (@varanasipolice) August 10, 2020
காவல்துறையினர், கடந்த ஜூன் மற்றும் மே மாதங்களில் பிரயாக்ராஜ் மற்றும் மீரட் பகுதியில் உள்ள சிறிய சந்தைகளில் நுழைந்து அங்கிருந்த காய்கறிகளை சேதப்படுத்தியுள்ளனர். பிரயாக்ராஜ் பகுதியில் அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் வாழ்வாதாரங்களை சேதப்படுத்திய காவல்துறையினர் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளனர். இதனையடுத்து, மீரட் பகுதி காவல்துறையினர் மீதும் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் வியாபாரிகளின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நடந்துகொள்வது பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் காவல்துறையினரின் இத்தகைய செயல்களுக்கு எதிராக நெட்டிசன்கள் தொடர்ந்து தங்களது கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: `ரூ.100 லஞ்சம் கேட்ட அதிகாரிகள்: தரமறுத்த சிறுவன்’ - முட்டை வண்டியைத் தள்ளிவிட்ட கொடூரம்
http://dlvr.it/RdQQHP
Tuesday, 11 August 2020
Home »
» உ.பி அதிர்ச்சி: தள்ளுவண்டி வியாபாரியிடம் அத்துமீறிய போலீஸ்! - வைரல் வீடியோவால் சஸ்பெண்ட்