கேரள மாநிலம் கோழிக்கோட்டில் துபாயிலிருந்து 180-க்கும் அதிகமான பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர் எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட அதே நாளில் நடந்த இந்த விபத்து கேரளா மட்டுமல்லாது மொத்த இந்தியாவையும் சோகத்துக்குள்ளாக்கியது.கேரள விமான விபத்து
விபத்து நடந்த உடனேயே அருகிலிருந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இறந்த விமானியின் உடலையும் பொதுமக்கள்தான் மீட்டுள்ளனர். விபத்து நடந்த விமானத்தில் பயணித்த பலருக்கும் கொரோனா தொற்று இருந்ததால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அம்மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கேரள போலீஸார் மரியாதை செலுத்தியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Also Read: கேரளா: `கடைசிவரை போராடிய விமானிகள்!’ - விபத்து நொடிகளை விவரிக்கும் அதிகாரிகள்
`விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் முன் வரிசையில் நின்று மீட்புப் பணியில் ஈடுபட்டு தற்போது தனிமைப்படுத்தலில் இருக்கும் துணிச்சலான வீரர்களுக்கு கேரள காவல்துறை வாழ்த்துகளையும் வணக்கங்களையும் செலுத்துகிறது’ எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசியுள்ள 32 வயது இளைஞர் ஃபைசல்,`இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கேரள காவல்துறையின் அதிகாரபூர்வமான மரியாதையாக எனக்குத் தெரியவில்லை.கேரளா
இரண்டு காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களைப் பார்வையிட்டனர். அதில் ஒரு அதிகாரி எங்களுக்கு நன்றி தெரிவித்து வணக்கம் தெரிவித்தார். எங்களுக்குத் தருவதற்கு இந்த மனமார்ந்த நன்றிகள் மட்டுமே உள்ளதாகத் தெரிவித்தார். சம்பவ இடத்தில் நிறைய பேர் இருந்தனர். அவர்களும் தங்கள் பங்குக்கு நிறைய உதவி செய்தனர். அவர்களின் சார்பாக நாங்கள் வணக்கத்தை ஏற்றுக்கொண்டோம்’ என்று கூறியுள்ளார்.
அதேநேரம், தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குத் தன்னிச்சையாகச் சென்று மரியாதை செலுத்தியதாக மலப்புரம் காவலர் ஹுசைன் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுதொடர்பாக டி.எஸ்.பி தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Also Read: கேரளா விபத்து: 45 நிமிடங்களில் 100 ஆம்புன்ஸ்கள்! - மீட்புப் பணியின் திக்... திக் நிமிடங்கள்
http://dlvr.it/RdMKvB
Monday, 10 August 2020
Home »
» `போலீஸின் அதிகாரபூர்வ மரியாதையாகத் தெரியவில்லை!’ - கேரள வைரல் போட்டோவும் பின்னணியும்