இந்தியா முழுவதும் ஈத் பண்டிகை சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்திய ராணுவத்தில் 162 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த சாகிர் மன்சூர் என்ற வீரர் இந்தப் பண்டிகையைத் தன் குடும்பத்தினருடன் கொண்டாட ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறையில் சென்றுள்ளார். இந்த நிலையில், அவர் நேற்று மாலை முதல் காணாமல் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாகிர் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டிருக்கலாம் என ராணுவ அதிகாரிகள் தங்களது சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதனால், ஜம்மு - காஷ்மீர் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
Rifleman Shakir Manzoor of 162 Battalion (TA), is missing since 1700hrs yesterday. His abandoned burnt car has been found near #Kulgam. It is suspected that the soldier has been abducted by terrorists. Search op in progress.#TerrorismFreeKashmir #Kashmir@adgpi @NorthernComd_IA— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) August 3, 2020
ட்விட்டரில் #TerrorismFreeKashmir என்ற ஹேஷ்டேக்கின் கீழ் இந்திய ராணுவம், ``162 பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த ரைஃபிள்மேன் சாகிர் மன்சூர் நேற்று மாலை 5 மணி முதல் காணவில்லை. குல்கம் பகுதியில் அவருடைய கார் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது. அவரைத் தேடி வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளனர். சாகிரின் சொந்த மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள குல்கம் பகுதியில் உள்ள ரம்பாமாவில் இருந்துதான் அவருடய கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷோபியான், குல்கம் மற்றும் ஆனந்த்நாக் மாவட்டங்களில் அதிகாரிகள் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பயங்கரவாதிகள்
காவல்துறை அதிகாரிகள் ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய்களைப் பயன்படுத்தி தேடலில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாகிரின் குடும்பத்தினர் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக மீட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆஃப் டியூட்டியில் இருக்கும் வீரர்களை பயங்கரவாதிகள் குறி வைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இளம் ராணுவ வீரர் ஒருவர் ஷோபியான் பகுதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் கலந்துகொள்ள வந்தபோது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டார். இதையடுத்து, அதிகாரிகள் அவரையும் தீவிரமாகத் தேடி வந்தனர். பின்னர், அவரது உடல் திருமணம் நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: `பயங்கரவாதிகள் தாக்குதலில் இருவர் உயிரிழப்பு!’ - உடல்மீது அமர்ந்து அழுத 3 வயது குழந்தை
http://dlvr.it/RcwrtK
Tuesday, 4 August 2020
Home »
» காஷ்மீர்: `எரிந்த கார்; பயங்கரவாதிகளின் சதி?!’ - விடுமுறையில் வந்த ராணுவ வீரர் மாயம்