"தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி" என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப் பெற்ற அடுத்த சில நிமிடங்களிலேயே தானும் ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா. தோனிக்கு 39 வயதாகிறது. ரெய்னாவுக்கு 33 வயதுதான் ஆகிறது. இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப இன்னமும் அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஏனோ அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். இந்தியாவின் பீல்டிங் தரத்தை உயர்த்திய முக்கிய வீரர்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா என்றால் அது மிகையல்ல. இந்தியாவுக்காக 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7,787 ரன்களை குவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. தோனியின் ஓய்வு அறிவிப்பால் ரெய்னாவின் செய்தி ஓரமாக ஒதுங்கிவிடும் என்று அவருக்கு தெரியாமல் இல்லை. ஆனாலும் தன் முடிவை அறிவித்தார் ரெய்னா. இந்தியாவுக்கு பல ஒருநாள் போட்டிகளில் கடைசிக் கட்டத்தில் வெற்றித் தேடிக் கொடுத்தவர் ரெய்னா. கிரிக்கெட் ரசிகர்கள் ரெய்னாவை மறந்தாலும் சக வீரர்கள் அவருக்கு தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். A great fielder,brilliant aggressive batsman and a true friend @ImRaina well done on your career for our country. Wish you all the luck for your future #rainaretires pic.twitter.com/ZJJxImWS4X — Irfan Pathan (@IrfanPathan) August 15, 2020 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "பீல்டிங்கில் கெட்டிக்காரர், பிரமாதமான ஆக்ரோஷமான பேட்ஸ்மேன் மற்றும் உண்மையான நண்பன் சுரேஷ் ரெய்னா. இந்தியாவுக்காக விளையாடிய காலங்களில் பெருமை சேர்த்துள்ளீர்கள், சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துகள்" என தெரிவித்துள்ளார். From sharing the dressing room with you, practicing with you in my backyard and having conversations over meals, I will miss all of that. Go well brother in your second innings #RainaRetires pic.twitter.com/vUeRjnRAPo — Mohammad Shami (@MdShami11) August 15, 2020 இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி "உன்னுடன் ஓய்வு அறையை பகிர்ந்தது, மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டது, சாப்பிடும்போது உரையாடுவது என அனைத்தையும் நான் மிஸ் செய்வேன். இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துகள் சகோதரா" என பதிவிட்டுள்ளார். One of the most passionate and vibrant guys I have ever played with. Good luck on the new innings Raina bhai @ImRaina pic.twitter.com/HQmIyfglJ1 — Yuzvendra Chahal (@yuzi_chahal) August 16, 2020 சுழற்பந்துவீச்சாளர் சாஹல் "நான் விளையாடியதில் மிகவும் துடிப்பான வேகமானவர் சுரேஷ் ரெய்னா. ரெய்னா பாய் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு வாழ்த்துகள்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். Congratulations @ImRaina on a splendid career . One of the best southpaw batters and a brilliant fielder . All the best for your life ahead #Raina pic.twitter.com/cEWV9YhwA1 — Mithali Raj (@M_Raj03) August 16, 2020 இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம் மிதாலி ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கை அமைந்ததற்கு என் வாழ்த்துகள் ரெய்னா. மிகச்சிறந்த கடைநிலை பேட்ஸ்மன்களில் ஒருவர், மிகப் பிரமாதமான பீல்டரும் கூட. எதிர்காலம் சிறப்பாக அமைய என் வாழ்த்துகள்". Bit shocking but I guess you feel it when you feel it. Good career bro, have a great retirement, still remember the time when we came into the squad ? best wishes moving forward @ImRaina pic.twitter.com/63nmPkuiMM — Rohit Sharma (@ImRo45) August 16, 2020 இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மா "எனக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் இது சரியான தருணம் என உணர்ந்ததால் இதை செய்திருக்கிறீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு வாழ்த்துகள் சகோதரா. நாம் ஒன்றாக இந்திய அணிக்குள் நுழைந்தது இப்போதும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது" என தெரிவித்துள்ளார். இவர்களை தவிர கவுதம் காம்பீர், குல்தீப் யாதவ், ஹர்பஜன் சிங், கே.எல்.ராகுல் என பலரும் ரெய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.
http://dlvr.it/Rdm2Q9
Sunday, 16 August 2020
Home »
» "தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி" சுரேஷ் ரெய்னாவுக்கு குவியும் வாழ்த்துகள் !