கேரள மாநிலம் காசர்கோடு உப்பளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர் காசர்கோடு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதினது. இந்த நிலையில் உடல்நிலை மோசமான கர்ப்பிணி பெண்ணுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டது. மிகவும் மோசமான நிலைக்குச் சென்ற அந்த கர்ப்பிணி பெண்ணை கண்ணூர் பரியாரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
அதைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி பெண் மெடிக்கல் காலேஜிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் ஆனந்த் ஜாண் மற்றும் எமெர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீசியனான ராபின் ஜோசப் ஆகியோர் ஆம்புலன்ஸில் இருந்தனர். கர்ப்பிணி பெண் என்பதால் பெண் ஒருவர் இருந்தால் நல்லது என நினைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றொரு எமெர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீசியனான ஸ்ரீஜாவை வரவழைத்து வழியில் அவரையும் உடன் அழைத்து சென்றனர். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் பையனூர் கோத்தாயம் முக்கு பகுதிக்கு சென்ற சமயத்தில் பிரசவ வலியால் அந்த பெண் துடித்தார். எமெர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீசியன் ஸ்ரீஜா அந்த பெண்ணை பரிசோதித்தபோது உடனடியாக பிரசவம் பார்த்த பிறகுதான் மேற்கொண்டு பயணிக்க முடியும் என தெரியவந்தது.கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலந்ஸ் ஊழியர்கள்
இதைத் தொடந்து ஆம்புலன்ஸ் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆம்புலன்ஸில் இருந்த எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீசியன்கள் ராபின் ஜோசப், ஸ்ரீஜா ஆகியோர் பாதுகாப்பு கிற்றுகள் அணிந்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தாய்க்கும் சேய்க்கும் முதலுதவிகளை செய்தனர். பின்னர் ஆம்புலன்ஸில் புறப்பட்டு கண்ணூர் பரியாரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாயையும் சேயையும் சேர்த்தனர்.
கண்ணூர் பரியானம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தாயும், குழந்தையும் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவக்கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் எமர்ஜென்ஸி மெடிக்கல் டெக்னீசியன்கள் ராபின் ஜோசப், ஸ்ரீஜா, டிரைவர் ஆனந்த் ஜாண் ஆகியோருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
மேலும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா டீச்சரும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கே.கே. ஷைலஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிந்தும் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள். கொரோனா காலத்தில் சுகாதார ஊழியர்கள் செய்யும் இதுபோன்ற நிகழ்வுகள் முன்மாதிரியாக விளங்குகிறது" என குறிப்பிட்டுள்ளார்.
http://dlvr.it/Rddcq9
Friday, 14 August 2020
Home »
» கேரளா: `கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா; ஆம்புலன்ஸில் பிரசவம்!' - நெகிழ்ச்சி சம்பவம்