கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பா.ஜ.க முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம். உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் தாயார் கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் விமானம் மூலம் கேரளாவுக்கு எடுத்துவரப்பட்டது. பின்னர் கோட்டயத்தில் நடந்த இறுதிச் சடங்கில் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அவர் உடல்நலம் சரியில்லாமல் இறந்ததாகக் கூறப்பட்டதாகவும். கொரோனாவால் இறந்ததாகச் சொல்லப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் `இண்டிபெண்டன்ஸ் டே. மதர்ஸ் மீல்’ (INDEPENDENCE DAY. Mother’s Meal) என்ற தலைப்பில் கடந்த 14-ம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டார் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம். அதில், தனது தாய் இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் இறந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இதுதான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம்
இது குறித்து சமூகச் செயற்பாட்டாளர் ஜோமோன் புத்தன் புரய்க்கல் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சையைப் பற்றவைத்திருந்தார். அந்த முகநூல் பதிவில், ``பா.ஜ.க தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம், தனது தாய் கொரோனாவால் மரணமடைந்ததாக இப்போது வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். டெல்லியில் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானத்துடன் வசித்த அவரது தாய் , கடந்த ஜூன் 10-ம் தேதி மரணமடைந்தார். அப்போது அவர் கொரோனாவால் இறந்ததாக எந்தச் செய்தியும் வெளிவரவில்லை. கடந்த ஜூன் 14-ம் தேதி கோட்டயம் மணிமலையிலுள்ள அல்ஃபோன்ஸ் கண்ணந்தானத்தின் வீட்டிலும், சர்ச்சிலும் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
நானும் திருவனந்தபுரத்திலிருந்து மணிமலைக்குச் சென்று இறுதிச்சடங்கில் கலந்துகொண்டேன். அப்போது அவர் கொரோனாவால் இறந்ததாகச் சிலர் கிசுகிசுத்தனர். கொரோனாவால் இறந்த ஒருவரின் உடலை எம்பாமிங் செய்து, டெல்லியிலிருந்து விமானம் மூலம் கேரளத்துக்குக் கொண்டு வரவேண்டுமானால் அவர் எவ்வளவு செல்வாக்காக இருக்க வேண்டும் என மாநில பா.ஜ.க பொதுச் செயலாளர் ஒருவர் அப்போதே என்னிடம் சொன்னார். கொரோனாவால் இறந்த ஒருவரின் உடலை விமானத்தில் எடுத்துவந்து, எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் இறுதிச் சடங்கு நடத்தியது என்னை ஆச்சர்யப்படவைத்துள்ளது. இது போன்று எந்தச் சரித்திரத்திலும் நடக்காது" எனக் குறிப்பிட்டிருந்தார்.பி.ஜே.பி முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம்
இந்த குற்றச்சாட்டு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் கூறுகையில்,``என் அம்மாவுக்கு கொரோனா தொற்று இருந்தது. ஆனால் அவரது மரணத்துக்கு முன்பே கொரோனா சரியாகிவிட்டது. கொரோனா குணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை சான்றிதழ் வழங்கியது. ஆனால், கொரோனா நுரையீரல், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதித்ததால் அவர் மரணமடைந்தார். அவர் மரணத்துக்குப் பிறகு `கொரோனா நெகட்டிவ்’ என மருத்துவமனை சான்றிதழ் வழங்கியுள்ளது. கொரோனாவை மறைத்து அவரது இறுதிச் சடங்கை நடத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டு, பதிலளிக்கத் தகுதியற்றது" என்றார்.
http://dlvr.it/Rdq9sT
Monday, 17 August 2020
Home »
» கேரளா: `தாய் கொரோனாவால் இறந்ததை மறைத்து இறுதிச்சடங்கு?’ - சர்ச்சையில் முன்னாள் மத்திய அமைச்சர்