தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்கள் கொண்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியிடப்பட்ட தகவலில் ஒரே நாளில் 5,928 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 75,165 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,74,172 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,084 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,36,697 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் பேர் 7,418 உயிரிழந்துள்ளனர். ரூ.1,500 + ரூ.300 = ரூ.1,800 இல்லை : பணிப்பெண்ணின் வாதமும்.. ட்ரெண்டிங்கும்..
http://dlvr.it/RfpXN4
Wednesday, 2 September 2020
Home »
» தமிழகத்தில் இன்று 5,928 பேருக்கு கொரோனா : 6,031 பேர் டிஸ்சார்ஜ்