கேரள மாநிலம், மன்னார்காடு அருகே நாட்டு வெடிகுண்டால் காயமடைந்த கர்ப்பிணி யானை, கடந்த மே மாதம் உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது அதே மன்னார்காடு அருகே தமிழக – கேரள எல்லையில், அதேபோல நாட்டு வெடிகுண்டால் காயமடைந்த ஓர் மக்னா யானை (தந்தம் இல்லாத ஆண்) வலியுடன் சுற்றி வருகிறது. கோவை மாவட்டம், மருதமலை அருகே வாயில் காயத்துடன் ஒரு மக்னா யானை சாப்பிட கூட முடியாமல் உலாவிக் கொண்டிருந்தது.மக்னா யானை
Also Read: காயத்துடன் சுற்றும் மக்னா யானை! - கோவை வனத்துறை முக்கிய அறிவிப்பு
தமிழக வனத்துறையினர், அந்த யானையைக் கண்காணித்து வந்ததாகக் கூறிய நிலையில், அந்த யானை கேரள வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அங்கு அந்த யானைக்கு சிகிச்சை அளித்ததாகக் கேரள வனத்துறையினர் கூறினர்.
ஆனால், மக்னா யானை மீண்டும் தமிழகத்துக்குள் வந்தது. இதையடுத்து,``சிறப்புப் படை அமைத்து, அந்த யானையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உணவுடன் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கொடுத்து வருகிறோம்” என தமிழக வனத்துறையினர் கூறினர். இந்நிலையில், நேற்று கோவை மாங்கரை எஸ்.டி.எஃப் முகாம் அருகே அந்த மக்னா யானை வந்தது.மக்னா யானை
அந்த முகாமின் சமையல் செய்யும் இடத்துக்கு மக்னா யானை நுழைந்ததாகவும், இதனால், மக்னா யானையை வாகனத்தில் அதிக சைரன் ஒலியுடனும், பட்டாசு வெடித்தும் விரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. வனத்துறை யானை விரட்டும் வீடியோ வனவிலங்கு ஆர்வலர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், ``கேரளாவில் அவுட்டுக்காய் வைத்து யானை கொன்றுவிட்டார்களே? என்று அனைவருமே பரிதாபப்பட்டோம். அதே கொடுமை நம் ஊர் யானைகளுக்கு நடக்கும்போது அமைதி காக்கிறோம். மிகக்கொடுமையாக இருக்கிறது. யானை சாகக் கிடக்கும்போது முடிந்தால் சிகிச்சை கொடுப்பார்கள். அதுவரை யானையை விரட்டி விரட்டி அடிப்பார்கள். வாகனத்தை வைத்து ஒலி எழுப்பு மோதுவதும், பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டியடிப்பதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. வீடு சேதம்
இந்த செயல் யானைகளைக் கோபப்படுத்தும். நேற்று இரவு சின்ன ஜம்புகண்டி அருகே மணி என்பவரது வீட்டை மக்னா யானை உடைத்துவிட்டது. இது வனத்தை ஒட்டி வாழும் பழங்குடி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும். யானையைத் தொடர்ந்து மேற்கு நோக்கி, அதாவது கேரளாவை நோக்கி விரட்டுகின்றனர். கேரளாவுக்கு சென்றால், அந்த யானையை தமிழகத்துக்கு விரட்டுவார்கள். உண்மையில் அந்த யானைக்கு சிகிச்சையளிக்க இரு மாநில வனத்துறையும் தயாராக இல்லை” என்றனர் வேதனையுடன்.
Also Read: காயத்துடன் சுற்றும் மக்னா யானை! - கோவை வனத்துறை முக்கிய அறிவிப்பு
இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ``மக்னா யானையின் நாக்குப்பகுதி சிதறி மேல்தாடை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டுமென பலர் கூறுகின்றனர். அப்படி மயக்க ஊசி செலுத்தி பிடித்தால், யானை உயிரிழக்க வாய்ப்புள்ளது. மேலும், வாய்ப்பகுதி முழுவதுமாக சேதமடைந்திருப்பதால் அதனால் எந்த உணவையும் உட்கொள்ள இயலாது.மக்னா யானை
கேரள வனத்துறையும், மருத்துவர்களும் கூட மயக்க ஊசி செலுத்தி, அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை எனகூறியுள்ளனர். தற்போதைய சூழ்நிலைக்கு யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார்.
http://dlvr.it/Rg4tQ7
Sunday, 6 September 2020
Home »
» கைவிட்ட தமிழக, கேரள வனத்துறை - வலியுடன் சுற்றித் திரியும் மக்னா யானை!