இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கும் பகுதிகளில் ஸ்ரீநகரும் ஒன்று. அங்கு முதன்முறையாக ஒரு பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, சி.ஆர்.பி.எஃபின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார். 1996-ன் தெலங்கானா கேடரின் ஐ.பி.எஸ் அதிகாரியான சாரு சின்ஹா தான் ஸ்ரீநகர் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாகப் பல்வேறு முறை இதே போன்ற சவாலான பணிகளில் பொறுப்பேற்றுள்ளார். CRPF-ல் பீகார் செக்டரின் ஐ.ஜியாக பணிபுரிந்து நக்சல்களைக் கையாண்டுள்ளார்.ஸ்ரீநகர்
இவரது தலைமையின் கீழ், பல்வேறு நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பிறகு ஜம்முவின் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு அங்கும் மிகச் சிறப்பாக பணியாற்றிய இவர் தற்போது ஸ்ரீநகருக்கு மாற்றப்பட்டுள்ளார். நேற்று இவரை ஸ்ரீநகரின் ஐ.ஜியாக நிமியக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read: `நான் இன்ஸ்பெக்டர், நீங்கள் போலீஸ்'- சென்னைப் பெண் ரயில்வே ஊழியரைக் கடத்த ஸ்கெட்ச் போட்ட பெண்கள்
2005-ம் ஆண்டு முதல் செயல்படத்தொடங்கிய இந்த சி.ஆர்.பி.எஃப் துறையில் இதுவரை எந்த ஒரு பெண் அதிகாரியும் ஐ.ஜியாக இருந்ததில்லை. இந்தத் துறை ஜம்மு-காஷ்மீர் போலீஸார் மற்றும் இந்திய ராணுவத்துடன் நெருக்கமாகச் செயல்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது.சாரு சின்ஹா
இது தொடர்பாகப் பேசியுள்ள சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகள், “ஸ்ரீநகரில் 2005-ம் ஆண்டு முதல் சி.ஆர்.பி.எஃப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவு ஜம்மு-காஷ்மீரின் புட்கம், காண்டர்பால், ஸ்ரீநகர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தங்கள் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. இந்தத் துறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் சாரு சின்ஹா தலைமை தாங்குவார்” எனத் தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/RfpXJD
Wednesday, 2 September 2020
Home »
» ஸ்ரீநகரின் முதல் பெண் சி.ஆர்.பி.எஃப் ஐஜி... யார் இந்த சாரு சின்ஹா ஐ.பி.எஸ்?