இங்கிலாந்து நாட்டின் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் கடந்த ஜனவரியில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். அவர்கள் இருவரும் அண்மையில் கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்த நிலையில் தங்கள் மனதிற்கு சரியென தோன்றும் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவும் முடிவு செய்தனர். “உலகம் முழுவதுமுள்ள மக்களின் சமூக வாழ்வியலை அதன் சூழல்களுடன் எல்லோருக்கும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் கண்டென்ட்டுகளை உருவாக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளனர் ஹாரி - மேகன் தம்பதியர். கடந்த வாரம் நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பான ஆவணப்படமான ‘ரைசிங் பீனிக்சில்’ காட்சியளித்தார் இளவரசர் ஹாரி. ‘நெட்பிளிக்ஸ் நிறுவனத்தை அவர்கள் தங்களது படைப்பு தளமாக மாற்றியமைத்ததில் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவர்களுடன் இணைந்து எங்களது பார்வையாளர்களுக்கு கதைகளைச் சொல்வதை எதிர்நோக்கி உள்ளோம். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள அவர்கள் தங்களது நிகழ்ச்சிகள் ஊடாக மக்களுக்கு ஊக்கமளிப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி டெட் சரண்டோஸ். அதன்படி இருவரும் இயற்கை தொடர்பான ஆவணப்படம் ஒன்றிலும், தன்னம்பிக்கை மிக்க பெண்களை அடையாளம் காண உதவும் தொடரிலும் தங்களது பணிகளை துவக்கியுள்ளனர். இதற்காக நெட்பிளிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் போட்டுள்ளனர் இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியர்.
http://dlvr.it/RftC8q
Thursday, 3 September 2020
Home »
» நெட்பிளிக்ஸோடு இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியர் புது டீல்..!