கேரள மாநிலம் பத்தணம்திட்டா மாவட்டம் அடூர் வடக்கோடத்துகாவு பகுதியில் இருந்து கொரோனா பாதித்த 45 வயது மற்றும் 20 வயது ஆன இரண்டு பெண்களுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு நேற்று இரவு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல் மற்றும் இரண்டு பெண்கள் மட்டுமே ஆம்புலன்ஸில் இருந்தனர். 42 வயது பெண்ணை கோழஞ்சேரி பொது மருத்துவமனையிலும், 20 வயது பெண்ணை பந்தளத்திலும் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் என நெளஃபலுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. வடக்கோடத்துகாவு பகுதியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோழஞ்சேரி மருத்துவமனையில் 45 வயது பெண்ணை கொண்டுபோய் விட்டார் நெளஃபல்.
அடுத்ததாக பந்தளம் மருத்துவமனைக்கு 20 வயது பெண்ணை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றார். பந்தளம் செல்லும் வழியில் ஆறன்முளா விமான நிலையத்துக்காக நிலம் எடுக்கப்பட்ட ஒதுக்குப்புறமான பகுதியில் ஆம்புலன்சை நிறுத்தியுள்ளார் நெளஃபல். அங்கு ஆம்புலன்ஸில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.கேரள 108 ஆம்புலன்ஸ்
அந்த பெண்ணிடம் தவறாக நடந்துவிட்டு, தன்னை மன்னிக்கும்படி வேண்டியிருக்கிறார் ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல். மேலும் இதுபற்றி வெளியே கூற வேண்டாம் எனவும் அவர் கெஞ்சியிருக்கிறார். நெளஃபல் மன்னிப்புக் கேட்டதை அந்த பெண் தனது மொபைலில் ரகசியமாக பதிவு செய்திருக்கிறார். பின்னர் நெளஃபல் மீண்டும் ஆம்புலன்ஸை இயக்கி பந்தளம் மருத்துவமனையில் அந்த பெண்ணை இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதுகுறித்து அந்த பெண் நேற்று இரவு போலீஸில் புகார் அளித்ததைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
கொரோனா நோயாளிகளை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்போது சுகாதார பணியாளர் உடன் இருக்க வேண்டும் என்ற விதியை மீறி ஆம்புலன்ஸ் டிரைவர் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபலுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து கொட்டாரக்கரை சிறையில் உள்ள தனிமை மையத்துக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபல் மீது கடத்தல், பட்டியலின சித்திரவதை தடுப்புச்சட்டம் உள்ளிட்டவைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா
இந்த வழக்கில் ஆம்புலன்ஸ் டிரைவர் நெளஃபலை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா உத்தரவின்பேரில் நெளஃபல் ஆம்புலன்ஸ் டிரைவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறுகையில், "ஆம்புலன்ஸ் டிரைவரின் இந்த செயல் எதிர்பாரதவிதமானது. கடந்த ஆட்சியில்தான் இந்த டிரைவர் நியமிக்கப்பட்டார். அனைத்து ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பின்னணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும். அபாய நிலையில் உள்ள நோயாளிகள் மட்டுமே இரவு நேரத்தில் ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்படுவார்கள். பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்" என்றார்.
http://dlvr.it/Rg6rRk
Monday, 7 September 2020
Home »
» கேரளா: கொரோனா பாதித்த இளம் பெண்... ஆம்புலன்ஸில் பாலியல் வன்கொடுமை! - சிக்கிய ஓட்டுநர்