நவம்பர் மாதம் மனபதற்றம் மற்றும் மன அழுத்தத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுஷாந்த் சிங், தான் எதையும் விரும்பவில்லை, வாழ விருப்பமில்லை என்று தன்னிடம் கூறியதாக சுஷாந்துக்கு சிகிச்சை அளஎன்.டி.டிவிக்கு கொடுத்த அறிக்கையில் கூறியுள்ளார். மருத்துவரின் அறிக்கையில், சுஷாந்த் சிங் நவம்பர் 27, 2019அன்று மும்பை இந்துஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரது மோசமான நிலை குறித்து அவருடைய மேனேஜர் ஸ்ருதி மோடி அவருடன் தொடர்புகொண்டு பேசியதாகவும் தெரிவித்துள்ளார். மறுநாள் அவரை பரிசோதித்த மருத்துவரிடம், தான் மன அழுத்ததுடன் போராடிக் கொண்டு இருப்பதாகவும், சரியாக தூக்கம் வரவில்லை, பசிக்கவில்லை என்றும் அவரிடம் சுஷாந்த் கூறியுள்ளார். மேலும் தான் எதையும் விரும்பவில்லை, வாழ விருப்பமில்லை என்றும், 10 நாட்களாக இதேபோன்று இருப்பதாக சுஷாந்த் கூறியதாக அவர் கூறியுள்ளார். அப்போதுதான் சுஷாந்திற்கு மன அழுத்தம் மற்றும் மன பதட்டம் அதிகமாகி இருந்ததை கண்டறிந்ததாகவும், பரிசோதனையின்போது தற்கொலை எண்ணம் எதுவும் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் சுஷாந்தின் இந்த நிலைக்கு வெளிப்புற காரணிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர் குறிப்பிட்டிருந்தார். அவரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எதுவும் நடக்கவில்லை என்றும், மேலும் பாதுகாப்பற்ற நிலையில் அவர் இருப்பதும் தெளிவாக தெரிந்துள்ளது. மேலும் அவர் 80% பாதிப்படைந்திருக்கிறார். உடலில் தைராய்டு, வைட்டமின் பி12, டி3, ஹீமோகுளோபின், செரோட்டோனின் போன்றவற்றின் குறைபாடுகளால்கூட மூளையில் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு இதுபோன்ற மன அழுத்தம் உருவாகலாம் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். நவம்பர் 30ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து சுஷாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ஜனவரி மாதத்தில் சுஷாந்தின் நிலை மோசமடைந்ததை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு ரியா சக்ரவர்த்தி கூறியுள்ளார். ஆனால் அதற்கு பதிலாக சண்டிகரில் உள்ள தனது சகோதரியைப் பார்க்கப் போவதாக சுஷாந்த் முடிவு செய்துள்ளார். ஆனால் ஜூன் 14ஆம் தேதி தனது வீட்டில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார். அவரது தந்தை ரியா சக்ரவர்த்தி தான் தனது மகனின் மறைவுக்குக் காரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளார். சிபிஐ இயக்குநரகம் மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
http://dlvr.it/RfzRTc
Friday, 4 September 2020
Home »
» ’'நான் வாழ விரும்பவில்லை’’ என சுஷாந்த் சிங் தன்னிடம் கூறியதாக மருத்துவர் அறிக்கை.!