வெளிநாட்டு பறவைகளை வரவேற்கும் விதமாக சேலம் மாவட்ட இளம் பறவை ஆர்வலர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை பறவைகள் வலசை காலமாகும். இந்த காலங்களில் வெளிநாட்டு பறவையினங்கள் இரைதேடி இந்தியாவிற்கு வருவதாக கூறுகின்றனர் பறவை ஆர்வலர்கள். இந்தப்பறவைகளை வரவேற்கும் விதமாக சேலம் மாவட்ட இளம் பறவை ஆர்வலர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் மண்கொத்தி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து வலசை வருகின்றன. அவ்வாறு வரும் பறவை இனங்களை பொதுமக்கள் இடையூறு செய்யாமல் பாதுகாத்திட்ட வேண்டும் என்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் இரைதேடி வரும் பறவை இனங்கள் இங்கு இனப்பெருக்கம் செய்யாமல், விவசாயத்திற்கு தீங்கு விளைக்கும் பூச்சி, புழுக்களை சாப்பிட்டு பின்னர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தங்களின் இருப்பிடங்களுக்குச் செல்கின்றன. வீடியோ கான்பரன்ஸ் விசாரணைதானே? அசால்ட்டாக புகைப்பிடித்த வழக்கறிஞருக்கு அபராதம்
http://dlvr.it/RhLggx
Friday, 25 September 2020
Home »
» “மண்கொத்தியே வருக வருக”- பறவைகளை வரவேற்று சுவரொட்டி.!