காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள காங்கிரஸ் கமிட்டி அறிக்கையில், காங்கிரஸ் தலைவருக்கு துணையாக செயல்பட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியில், அடுத்தகட்ட நடவடிக்கைகளிலும் இந்த குழு தலைவருக்கு ஆலோசனைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் காரிய கமிட்டிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 6 பேர் கொண்ட அந்தக் குழுவில் ஏ.கே.அந்தோனி, அகமத் படேல், அம்பிகா சோனி, கே.சி.வேணுகோபால், முகுல் வாஸ்னிக் மற்றும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத் விடுவிக்கப்படுள்ளார். காந்திக்குடும்பத்தை சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வர வேண்டும் என தலைமைக்கு கடிதம் எழுதியவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RgQqDm
Friday, 11 September 2020
Home »
» பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து குலாம் நபி ஆசாத் விடுவிப்பு : காங்கிரஸில் அதிரடி மாற்றம்