மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், ரயில்களில் உள்ள சமையல் பெட்டியை பயணிகளுக்கானதாக மாற்றலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளது. அதன் மூலம் ரயில்வே துறைக்கு வருமானம் பெருகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர், அதனை ரயில்வே வாரியத்தின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளார். ஏஐஆர்எப் ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயலாளர் சிவ் கோபால், "அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்படுகிறது. ரயில்களில் உள்ள சமையல் பெட்டிகள் மற்றும் உணவு சேவை முலம் வருமானம் கிடைப்பதில்லை" என்கிறார். ரயில்வே ஊழியர்கள் சங்கத்தின் வருமானத்தைப் பெருக்கும் வழிமுறைகளை ஆராய்ந்துவருவதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ரயில்களில் லினன் துணியிலான போர்வைகள், தலையணைகள் வழங்குவதை நிறுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறுகிறது. இந்திய ரயில்வே துறையில் செலவுகளைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் படிப்படியாக எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் தொடர்ச்சியாக சமையல் பெட்டியை நீக்கும் முடிவும் ஆலோசிக்கப்படுகிறது.
http://dlvr.it/RhWBrc
Monday, 28 September 2020
Home »
» ரயிலில் சமையல் பெட்டியை நீக்கலாம்: வருமானத்தைப் பெருக்க ரயில்வே ஆலோசனை
ரயிலில் சமையல் பெட்டியை நீக்கலாம்: வருமானத்தைப் பெருக்க ரயில்வே ஆலோசனை
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!