சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் பதிவுகளின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக இருக்கிறார் நடிகை அமலாபால். பிட்னஸ், யோகா என ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி பதிவிடுவதில் அவருக்கு ஆர்வம் குறைவதில்லை. இப்போது உடலுக்குப் புத்துணர்வூட்டும் பஞ்சகர்மா ஆயுர்வேத சிகிச்சை பற்றி சிலாகித்துள்ளார் அமலாபால். "என் இனிய ரசிகர்களே, ஏற்கெனவே உங்களுக்குத் தெரியும். என் புரொபைல் என்பது என் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் என்னுடைய சிறந்த மாற்றத்தை நோக்கிய எல்லையற்ற பயணம். நான் பஞ்சகர்மா சிகிச்சைக்குப் பதிவு செய்திருக்கிறேன்" என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். "நம்முடைய முன்னோர்களின் பொக்கிசங்களை நாம் அறிவதில்லை. வாழ்க்கையில் மேற்கத்திய பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அவர்கள் தங்கச்சுரங்கம் போன்ற தகவல்களை நமக்காக விட்டுப்போயிருக்கிறார்கள். முழுமையான மாற்றத்தைத் தரும் இதுவொரு புத்துணர்வு சிகிச்சை. நீங்கள் சில நாட்களுக்கு என்னைப் பின்தொடருங்கள். 180 டிகிரி மாற்றத்திற்கான என் அனுபவத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்" என்றும் அமலாபால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்!
http://dlvr.it/RhGt9b
Thursday, 24 September 2020
Home »
» சில நாட்களுக்கு என்னைப் பின்தொடருங்கள்: பஞ்சகர்மா சிகிச்சை பற்றி அமலா பால்